வியாழன், 2 பிப்ரவரி, 2017

வீட்டு பட்ஜெட் - நகைச்சுவைக் கட்டுரை

வீட்டு பட்ஜெட் - நகைச்சுவைக் கட்டுரை 
-------------------------------------------------------------------------------------------------
அரசாங்க பட்ஜெட்டாவது வருஷத்துக்கு ஒரு முறைதான். நம்ம வீட்டு பட்ஜெட்டோ  மாசா மாசம் போட வேண்டியதா இருக்கு. வரவு பத்தலேன்னா அரசாங்கம் வரிகளைக் கூட்டி சமாளிச்சுடுது . நம்ம வரவு பத்தலேன்னு மேனேஜர் கிட்டே வருஷத்துக்கு ஒரு முறைதான் அப்ரைசல் நேரத்திலே கேட்க முடியுது.

அப்ப, அவரு நம்ம லேட்டா வந்தது , ஒழுங்கா வேலை பார்க்காதது எல்லாத்தையும் குறிச்சு வச்சுக்கிட்டு கேள்வி கேட்டு மடக்கிட்டு ஒரு பெர்ஸண்டோ ரெண்டு பெர்ஸண்டோ கூட்டுறாரு. எப்படிப் பத்தும்.

சரி செலவையாவது குறைக்கலாம்னு பார்த்தா முடியுதா. எண்ணெய், பருப்பு , காய் விலையெல்லாம் கூடிக்கிட்டே போகுது. நம்ம வேற ருசியா சாப்பிட்டு பழகியாச்சு. எதையும் குறைக்க முடியலே.

செல்போன் , வைஃபி எல்லாம் வந்த பிறகு இன்டர்நெட் செலவும் ஏறிக்கிட்டே போகுது. ஒருத்தனும் படிக்கலேன்னாலும், நம்ம தினசரி குட் மார்னிங், குட் நைட் ஸ்டேட்டஸ் போடறதை விட முடியலே.

அப்புறம் புள்ளைங்க படிப்பு செலவு கேட்கவே வேணாம். தனியா ஸ்போக்கன் இங்கிலிஷ்  , ஸ்போக்கன் பிரெஞ்சு  ப்ரோக்ராம் னு  ஏதாவது ப்ரோக்ராம் வச்சுட்டு மாசா மாசம்   பில் அனுப்பிடறாங்க. அதுங்களுக்கு  ஸ்போக்கன் தமிழே இன்னும் சரியா வரலே . இதுலே இது வேற.

இது தவிர குளிர் காலத்திலே குளிரால் சளி,  காய்ச்சல், வெயில் காலத்திலே வேர்வையாலே சளி, காய்ச்சல்ன்னு  மருத்துவ செலவும் மாறி மாறி வந்துக்கிட்டே இருக்கும்.,  சளியும் காய்ச்சலும்  வரணும்னு முடிவு பண்ணிட்டா அது காலம்லாம் பாத்துக்கிட்டு வர்றது இல்லே. 

இதுக்கு நடுவிலே சொந்தக்காரங்க கல்யாணம், வளை காப்புகுழந்தை பிறப்பு , பெயர் வைப்புன்னு அவங்க குடும்பம் வளர்ற ஒவ்வொரு ஸ்டேஜ் லேயும் கூப்பிட்டுக் காண்பிப்பாங்க. நல்ல வேளை, பள்ளி சேர்ப்பு, முதல் வகுப்பு முடிப்புன்னு ஆரம்பிக்கலே . அப்படி வச்சா நாமும் பதிலுக்கு பதில் வச்சு  பழிக்கு பழியா செலவுக்கு செலவு வச்சுடுவோம்லே .

இப்படி வர்ற எல்லாச் செலவுக்கும் பட்ஜெட் போட்டு பார்த்தா மாசா மாசம் பற்றாக்குறை பட்ஜெட்டா தான் வர்றதுஅரசாங்க பட்ஜெட்டில் பற்றாக்குறை இருந்தா   கடன் வாங்கியோ ரூபாய் நோட்டு அடிச்சோ சமாளிச்சுடுறாங்க.

நம்ம ரூபாய் நோட்டை எடுக்கவே ஏடிஎம் வாசலிலே காத்துக் கிடக்க வேண்டியதா இருக்குஅப்புறம்     நம்ம கடன் கேட்டாலும்  எவன் கொடுக்கிறான். வாங்கின பழைய கடனை திருப்பிக் கொடுக்கச்  சொல்றான்என்ன பண்றது.
------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


6 கருத்துகள்:

 1. // பள்ளி சேர்ப்பு, முதல் வகுப்பு முடிப்பு // ஆகா...! சொல்லிட்டீங்களா...! ரைட்டு...

  பதிலளிநீக்கு
 2. வருமானவரி மாதத்தில் பொருத்தமான பதிவு!

  பதிலளிநீக்கு
 3. அட! புதுசா வேற விழா எல்லாம் சொல்லிட்டீங்களே!!!! ஆரம்பிச்சுருவாய்ங்களே!! அது சரி ஒன்னு முக்கியமான ஒன்னு விட்டுட்டீங்களே, நாம மொய் வைக்கும் போது அவங்களுக்கு எப்படியோ ஆனா நமக்கு வர மொய் நம்ம செலவு செஞ்சத கூடத் தொடாது...

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கு மட்டுமல்ல. எங்கள் அனைவருக்குமே பொருந்தும்.

  பதிலளிநீக்கு