செவ்வாய், 31 ஜனவரி, 2017

காலக் கணக்கன்

காலக் கணக்கன்
---------------------------------
இல்லாதார் வறுமையை
இருப்பவர் பெருமையை

உடலின் இளமையை
உயிரின் வலிமையை

அஞ்ஞான இருளை
மெஞ்ஞான    ஒளியை

ஆக்கியும் அழித்தும்
கூட்டியும் கழித்தும்

காலக் கணக்கனின்
கடமை விளையாட்டு
----------------------------------நாகேந்திர பாரதி
http://nagendrabharathi.com/

5 கருத்துகள்:

  1. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது.....காலக்கணக்கனிடமிருந்து தப்பமுடியாது.

    பதிலளிநீக்கு
  2. காலக் கணக்கனின்
    கடமை விளையாட்டு // nalla vati

    பதிலளிநீக்கு