செவ்வாய், 25 அக்டோபர், 2016

ஆகாயத்தின் அடையாளம்

ஆகாயத்தின் அடையாளம்
----------------------------------------------
வந்து போகும் மேகங்கள்
கலைத்துச் செல்லும் காற்று

உயரப்  பறக்கும் பறவைகள்
விரைந்து திரியும் வாகனங்கள்

எண்ணில் அடங்கா நட்சத்திரங்கள்
இரவும் பகலுமாய்த் தோற்றங்கள்

எதுவும் இங்கே காட்டாது
ஆகாயத்தின் அடையாளம்

சுத்தமாய் சுகமாய் வெளியாய்
சுதந்திரமாய்  ஆகாயம்
---------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

6 கருத்துகள்:

 1. சுதந்திர ஆகாயம்,,,,,/சொல் சுட்டி நல்லாயிருக்கு/வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
 2. இனிய தீபாவளி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. சுத்தமாய் சுகமாய் வெளியாய்
  சுதந்திரமாய் ஆகாயம்//
  மனிதனால் அப்படியிருக்கு முடியவில்லையே.
  நன்று சகோதரா.

  பதிலளிநீக்கு
 4. ஆம். ஐம்பூதங்களில் ஆகாயம் மட்டும் தான் சுதந்திரமாய் இருக்கிறது.
  அருமை

  பதிலளிநீக்கு