சனி, 3 செப்டம்பர், 2016

சுகமோ சுகம்

சுகமோ சுகம்
---------------------
வேர்த்து வழியும் போது
வீசும் காற்று சுகம்

குளிரில் நடுங்கும் போது
கூடும் போர்வை சுகம்

பசியால் வாடும் போது
பழைய சோறு சுகம்

தாகத்தில் தவிக்கும் போது
தண்ணீர் சுகமோ சுகம்

நேரத்தில் கிடைக்கும் போது
நேரும் சுகமே சுகம்
------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

1 கருத்து: