வியாழன், 29 செப்டம்பர், 2016

தோசையம்மா தோசை

தோசையம்மா தோசை
---------------------------------------
அரிசி உளுந்து சேர்த்து
ஆட்டி வரும் தோசை

மாவு நல்லா புளித்து
மலர்ந்து வரும் தோசை

மேனி முழுக்க பூத்து
மின்னி வரும் தோசை

மூணு கரண்டி தோசை
முக்கால் வாசி தோசை

மூணு சட்டினி  சேர்ந்தா
முழுமையான தோசை

மெத்து மெத்து தோசை
பத்து தோசை ஆசை
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

2 கருத்துகள்:

 1. அட! பாப்பா பாட்டு பாணியில்! அருமை!!!

  பதிலளிநீக்கு
 2. மூணு சட்டினி சேர்ந்தா
  முழுமையான தோசை
  அட! 3 சட்னியா!!!
  ஆச்சரியமே!.....

  பதிலளிநீக்கு