செவ்வாய், 13 செப்டம்பர், 2016

காதல் நினைவு

காதல் நினைவு
-------------------------
பார்த்துக் கொண்டே இருக்கும்
அவள் முகம்

படுத்துக் கொண்டே இருக்கும்
அவள் மடி

தொட்டுக் கொண்டே இருக்கும்
அவள் விரல்

தொடர்ந்து கொண்டே இருக்கும்
அவள் கால்

இருந்து கொண்டே இருக்கும்
அவள் காதல் 
---------------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

2 கருத்துகள்:

 1. வணக்கம் !

  காற்றாய் உலவும் கவியாய் மணம்வீசும்
  ஊற்றாய் வடிந்து உயிர்பருகும் - மாற்றங்கள்
  ஏற்காமல் வாழ்க்கை எரிந்தாலும் காதலிக்கும்
  தூற்றுவார் நெஞ்சும் துளைத்து !

  காதல் இல்லா உலகம் இல்லை
  அருமை !

  பதிலளிநீக்கு