வெள்ளி, 17 ஜூன், 2016

எறும்புக்குள் ஈரம்

எறும்புக்குள்   ஈரம்
------------------------------
உணவை இழுத்துச் செல்லும்
எறும்புக் கூட்டமொன்று

அடிபட்ட எறும்பையும்
இழுத்துச் செல்கிறது

எறும்புப் புற்றுக்குள்
வைத்தியம் நடக்குமா

வலியுற்ற எறும்புக்கு
வாழ்வு கிடைக்குமா

புற்று மண்ணுக்குள்
புதைந்து போகுமா
-------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi;s poems

5 கருத்துகள்:

 1. தெரிந்தால் மனது வருத்தப்படும். அந்த எறும்பு மற்றவர்களுக்கு உணவே!

  பதிலளிநீக்கு
 2. விடை எறும்புகளுக்கே வெளிச்சம் நண்பரே

  பதிலளிநீக்கு
 3. தெரியவில்லையே சார்,ஆனாலும் தன் இனம் அனாதையாய் தெருவில் கிடப்பதை பார்க்க சகிக்காமல் 108 ன் உதவி இல்லாமல் இழுத்துச்செல்கிறதே/

  பதிலளிநீக்கு
 4. அருமை அருமை மிக மிக மிக ரசித்தோம். வித்தியாசமான சிந்தனை மிக்க வரிகள் எறும்பையும் கூர்ந்து கவனித்த வரிகள்..

  கீதா: நானும் மகனும் எறும்புகளை மிகவும் கூர்ந்து கவனித்து பல கதைகள் நாங்களாகவே சொல்லிக் கொள்வது வழக்கம். மகனுடன் பேசியதைக் கதையாகவே எழுதி வைத்திருக்கின்றேன். ஆனால் இன்னும் அது முடியவில்லை..ச....முடிந்தவுடன் பதிவிடுகின்றேன். அருமை அருமை....

  பதிலளிநீக்கு