வியாழன், 12 மே, 2016

பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம்
-------------------------------------
காய்ச்சலோ தலைவலியோ
கடுமையான   வியாதிகளோ

பாட்டி இருக்கும்வரை
படி தாண்டிப் போனதில்லை

அஞ்சறைப் பெட்டியிலே
அத்தனைக்கும் மருந்திருக்கும்

உணவே மருந்தாக
உட்கொண்ட காலமது

மருந்தே உணவாக
மாறிவிட்ட காலமிது
----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

7 கருத்துகள்:

 1. அருமையான கவிதை. பாட்டிகாலம் இன்று மாறிவிட்டது[[

  பதிலளிநீக்கு
 2. பாட்டியின் பெருமையை இன்று யாரறிவார்

  பதிலளிநீக்கு
 3. பாட்டி காலம் போய் பார்ட்டி காலம் வந்தது நண்பரே
  இங்கே காய்சல் வந்தால் பாட்டி வைத்தியம் இல்லை
  சாவே வந்தாலும் பார்ட்டி வைத்தியமே தான்...

  பதிலளிநீக்கு
 4. அஞ்சறைப் பெட்டியிலே
  அத்தனைக்கும் மருந்திருக்கும் unmai..sakothara..
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு