செவ்வாய், 31 மே, 2016

காதல் மாறிப் போச்சு

காதல் மாறிப் போச்சு
-------------------------------------
அந்தக் காலக் காதலுக்கு அன்னன்னிக்கு அரையணா காப்பிதாங்க செலவு . இந்தக் காலக் காதலுக்கு ஆயிரம் ரூபாய் காபி டேயிலே செலவு ஆகுதுங்க.

அப்பல்லாம் கிராமத்திலே குளத்தங்   கரையிலேயும்  நகரத்திலே கடற் கரையிலேயும்  பேசிக்கிட்டு கீசிக்கிட்டு இருப்பாங்க. இப்ப என்னடான்னா நகரங்கள்ளே பெரிய பெரிய மால்கள் வந்தாச்சு. கிராமங்கள்ளே இருந்தும் பக்கத்துக்கு டவுன் மாலுக்கு தனித் தனியா பஸ் ஏறிப் போயி சேந்துக் கிறாங்க  .

மாலுன்னா செலவில்லாமப் போயிடுமா. ஒரு பாடாவதி பர்ஸ் வாங்கினாலே நூறு ரூபாய் ஆகும். சுடிதார் பைஜாம்மான்னு  வாங்கினா ஏசி சார்ஜ் சேர்த்து ஆயிரம் ரூபாய்க்குக் குறையாது .

இவங்க பேசிச் சிரிக்கப் போனாங்களா இல்லே கடை கடையா ஏறி இறங்கப் போனாங்களான்னு தெரியலீங்க. ஒரு வேளை கல்யாணம் ஆனப்பறம் குடும்பச் செலவு எவ்வளவு ஆகும்னு கூட்டிக் கழிச்சுப் பார்த்து , முடியலேன்னா விலகிடலாம்னு முடிவு செய்யப் போறாங்களோ என்னவோ தெரியலீங்க.

ரெண்டு பெரும் வேலை பாக்கிறவங்களா   இருந்தா, அவனுக்கு அவள் ஒரு கர்சீப் வாங்கி கொடுத்திட்டு அவளுக்கு அவனை லெக்கின்ஸ்  வாங்க வச்சிடுறாதுணி வாங்கிக் கொடுத்தாச்சு. துணியிலே சிறுசு என்ன பெருசு என்னங்க. காதலோட வாங்கித் தர்றது தானே முக்கியம்னு சொல்லிடுவா.

இது தவிர சினிமா தியேட்டருக்குப்   போனா   அங்கே டிக்கெட் செலவை விட பாப் கார்ன் செலவு தான் ஜாஸ்தியா இருக்கு.

இப்படி ஒரு தடவை வெளியே போயிட்டு வந்தாலே அவளுக்கு கால் வாசி சம்பளம் காலி. அவனுக்கு முழுச் சம்பளமும் காலி. இதனாலே தான் இந்தக் காலக் காதலர்கள் அடிக்கடி வெளியே சேர்ந்து போறது இல்லே.

இருக்கவே  இருக்கு வாட்ஸ் அப் .   காசு செலவே இல்லாம காதல் சங்கதி பேசிக்கலாம். இன்டர்நெட் செலவு மால் செலவை விட கம்மி தானுங்களே.

அந்தக் காலத்திலே பாத்து பேசி பழகி புரிஞ்சு காதலிச்சு கல்யாணம் பண்ணி குழந்தை குட்டிகளோடு சேர்ந்து இருந்தாங்க.

இந்தக் காலத்திலே பேஸ் புக்  , வாட்ஸ் அப் காதல் எல்லாம் சீக்கிரமே டெலீட்  ஆகி ஆர்கைவ் ஆயிடுது .

----------------------------------------------------------------நாகேந்திர பாரதி

3 கருத்துகள்: