செவ்வாய், 10 மே, 2016

பூங்காப் பார்வை

பூங்காப் பார்வை
------------------------------
சிறுவர்கள் வேகமாக
ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்

பெரியவர்கள் மெதுவாக
நடந்துகொண்டு இருக்கிறார்கள்

மரங்கள் மட்டும்
அசையாமல் நின்று கொண்டு இருக்கின்றன

காற்றுக் காதலர்கள்
வந்தது தான் தாமதம்

தலையை விரித்துக் கொண்டு
என்னமாய்  ஆடுகின்றன
----------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

5 கருத்துகள்:

 1. சிறுவர்கள் சிரித்து
  மகிழ்ந்து ஓடவும்
  பெரியவர்கள் இரசித்து
  மெதுவாய் நடக்கவும்
  அந்தப் பூங்கா மரம்தான்
  காரணமென்றாலும் கூட
  மரமென்னவோ
  அசையாதே நிற்கிறது

  காதலர்கள்
  தன் நிழல் அமர்ந்து
  மிக நெருங்க
  அடக்கமுடியா
  கூச்சத்தில்
  மெல்ல அசைகிறது

  அதுவே
  அந்தச் சூழலை
  இன்னும் இரம்மியமாக்கிப் போகிறது

  (சும்மா மாத்தி யோசிச்சுப் பார்த்தேன் )

  பதிலளிநீக்கு
 2. நடைப் பயிற்சி நடக்குமே!

  பதிலளிநீக்கு
 3. அருமையான வரிகள் நண்பரே

  பதிலளிநீக்கு