வியாழன், 31 மார்ச், 2016

மகிழ்வில் ஒற்றுமை

மகிழ்வில் ஒற்றுமை 
------------------------------------
ரப்பர் அரிசியை 
குழைய வடித்து 

வெந்நீர் ஊற்றி 
வெங்காயம் கடித்து 

சாப்பிடும் போது
போகின்ற பசியும் 

பிரியாணி அரிசியை 
பூவாக வடித்து 

கறியும் குழம்பும் 
கலந்து அடித்து 

சாப்பிடும் போது 
போகின்ற பசியும் 

தருகின்ற மகிழ்வில் 
வருகின்ற தொற்றுமை 
---------------------------------நாகேந்திர பாரதி 
 

8 கருத்துகள்:

 1. ஏன் இரப்பர் அரிசி நண்பரே ?

  பதிலளிநீக்கு
 2. தருகின்ற மகிழ்வில்
  வருகின்ற தொற்றுமை
  முரண்பாடு உண்டே.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பசியைப் போக்கும் மகிழ்வில் மட்டும் ஒற்றுமை; மற்றவை எல்லாம் வேற்றுமை

   நீக்கு