வெள்ளி, 25 மார்ச், 2016

பறவைகள் ஒருவிதம்

பறவைகள் ஒருவிதம் 
-----------------------------------
காலையில் கிளம்பி 
எங்கோ செல்கின்றன 

மாலையில் திரும்பி 
மரத்திற்கு வருகின்றன 

சனியும் ஞாயிறும் 
விடுமுறை கிடையாது 

வேலைக்குப் போகின்றனவா 
விளையாடப் போகின்றனவா 

வேலையே விளையாட்டாய் 
விரும்பித்தான்  போகின்றனவா 
------------------------------------------நாகேந்திர பாரதி 
Click here to buy Nagendra Bharathi's poems

5 கருத்துகள்:

 1. அருமையான கவிதை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. வேலையே விளையாட்டுதான் நண்பரே....
  அருமை நண்பரே...

  பதிலளிநீக்கு
 3. அவைகளின் வாழ்வே விளயாட்டு தோழர்

  பதிலளிநீக்கு
 4. அவர்களின் வாழ்வே சுவாரஸ்யமானதுதானே அருமை,,,

  பதிலளிநீக்கு