வெள்ளி, 11 மார்ச், 2016

கோலத்தின் கோலம்

கோலத்தின் கோலம்
---------------------------------
சாணித் தண்ணீர் தெளித்து விட்டு
வாசலைப் பெருக்கி விட்டு

ஏழு புள்ளிக் கோலமொன்றை
இழுத்து விட்டு வரும்போது

வீட்டுக் கோழி ஓன்று
குஞ்சுகளைக் கூட்டி   வந்து

கோலத்தைக் கலைத்தபடி
கொத்திக் கொத்தி  இரை தேட

விரட்டுதற்கு மனமின்றி
வேடிக்கை பார்த்திடுவாள்
--------------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

7 கருத்துகள்:

 1. ஆஹா
  அற்புதமான
  படைப்பு ....
  வாழ்த்துக்கள் நண்பரே....

  பதிலளிநீக்கு
 2. நல்லதொரு எதார்த்தமான
  கவிதை
  வாழ்த்துக்கள் தோழர்

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஹா..ஹா.. அற்புதம் இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. கோழி போடும் கோலங்களைப்பார்க்கிறாளோ,,,,?

  பதிலளிநீக்கு
 5. கோழிக் கோலம் அருமை.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு