வியாழன், 14 ஜனவரி, 2016

அகர முதல

அகர முதல
---------------------------------------------------------------------------------------
'அகர முதல ' ன்னு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சா ' இது என்ன முட்டுக்காட்டு முதல மாதிரி அகரத்திலே இருக்கிற முதலையா ' ன்னு கேட்கிறாங்க. 'இல்லீங்க. இது முதலை இல்ல . முதல . அதாவது முதல். எழுத்துக்களுக்கு எல்லாம் முதல் எழுத்து ' ன்னு சொன்னா ' அது எப்படிங்க. என் பேர் கந்தசாமி. தானே முதல் எழுத்து' ன்னு விதண்டா வாதம் செய்வாங்க.

இந்த மாதிரி ஏடாகூட ஆளுங்களுக்கு திருக்குறள் வகுப்பு எடுக்கச் சொன்னாங்க. ' சரி, அகர முதல சொல்லுங்க' ன்னா ' ஆகார முதல' ன்னு ஆரம்பிப்பாங்க. ' உங்களுக்கு வேணும்னா ஆகாரம் முதலா இருக்கலாம். ஆனா எழுத்துக்களுக்கு அகரம் தான் முதல்என்று சொன்னால் ' அது எப்படி உங்களுக்குத் தெரியும்' ம்பாங்க.

ஒரு வழியா தமிழ் உயிர் எழுத்து , மெய் எழுத்து விவரம் எல்லாம் சொல்லி கொடுத்து ஆரம்பிப்போம். அறத்துப் பால், பொருட் பால், இன்பத்துப் பால் ன்னு மூணு பால் இதிலே இருக்குன்னு சொன்னதும், - ஆமாங்க. நீங்க நினைக்கிறது சரிதான் - ஆட்டுப் பால் , பசும் பால், ஒட்டகப் பால் மாதிரியா ன்னு கேட்பாங்க. நல்ல வேளை. லிட்டர் என்ன விலைன்னு கேட்காம விட்டாங்க.

இந்த ஒண்ணும் தெரியாதவங்களை யாவது  ஒரு மாதிரி சமாளிச்சுடலாம் . ஆனா அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு கேள்வி கேட்கிறாங்க பாருங்க. அவங்க கிட்டேதான் ரெம்ப கஷ்டம். அது மாதிரி ஒருத்தர்   ' சார், இந்த ஆயிரத்து ஐநூத்து ஐம்பது குறளையும் சொல்லிக் கொடுப்பீங்களா' ன்னு கேட்டார். என்ன இது . காணாமப் போனதாச் சொல்லிக்கிற அதிகப் படி குறள் இவருக்கு எப்படித் தெரியும்னு"  கேட்டா சொல்றாரு . ' ஆயிரத்து சொச்சம்னு தெரியும் . ஒரு குத்து மதிப்பா  ஐநூத்து ஐம்பது சேர்த்துக் கிட்டேன் ' ம்பாரு. ஒரே குத்தா குத்தணும் போல இருக்கும். 'அகர முதல' ஒரு குறளை ச் சொல்லிக் குடுக்கிறதுக் குள்ளேயே    நமக்கு ' தலை முதலா' கிறு கிறுக்குது . அத்தனை குறளுமா  .  

இதிலே இன்னொருத்தர் ' சார், இந்தத் திருக்குறளை அப்படியே இங்கிலீஷிலே  மொழி பெயர்த்துச் சொல்லுங்க' ம்பார். தமிழுக்கே தகிந்திணதொம் . இவருக்கு இங்கிலீஷ் கேட்குதான்னு கேட்டா ' இல்லே உங்களுக்கு இங்கிலீஷ் தெரியுமான்னு தெரிஞ்சுக்கதான் ' ம்பாரு. ரெம்ப முக்கியம்.

ஒரு வழியா சில பேர் ' இன்னைக்குப் போதும் சார், நாளைக்குத் தெருக்குறளைக்   கத்துக்குறோம் ' ம்பாங்கதெருவுக்குத் தெரு திருக்குறளைப் பரப்பணும்னு   நம்ம  நினைச்சா இவரு   திருக்குறளையே தெருக்குறளா மாத்துறது ரெம்ப  அதிகங்க  .
----------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


16 கருத்துகள்:

 1. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
  மகிழ்வோடு நவில்கின்றேன்
  கனிவோடு ஏற்றருள்வீர்

  பதிலளிநீக்கு
 2. தங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே,

  பதிவு அருமை. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாண்டின் பொங்கும் மங்கலம் அனைவருக்கும் எங்கும் எதிலும், எப்போதும் தங்குக..! என இறைவனிடம் மனமாற பணிவுடன் வேண்டுகிறேன்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. 2016 தைப்பொங்கல் நாளில்
  கோடி நன்மைகள் தேடி வர
  என்றும் நல்லதையே செய்யும்
  தங்களுக்கும்
  தங்கள் குடும்பத்தினருக்கும்
  உங்கள் யாழ்பாவாணனின்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 5. நல்ல வேளை,இன்பத்து பாலை பற்றி படத்தோடு விளக்குங்க என்று சொல்லாமல் விட்டார்களே :)

  பதிலளிநீக்கு
 6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் தங்கள் அன்பு நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு