திங்கள், 11 ஜனவரி, 2016

குழந்தைப் பருவம்

குழந்தைப் பருவம் 

இந்த எல் கே ஜி அட்மிஷனுக்கு ராத்திரிப் பகலாக் காத்துக் கிடந்து வாங்கி முடிச்சதும் அவ்வளவு டென்ஷனையும் நம்ம பிள்ளைங்க மேலே ஏத்தி விட்டுட்டு நம்ம ஜாலியா ஒதுங்கிக்கிறோம் .

அவங்க சுமக்கிற புத்தக மூட்டை, ரெயில்வே பிளாட்பார கூலித் தொழிலாளி கூட சுமந்திருக்க மாட்டான். அவ்வளவு புத்தகங்கள்.உலகத்திலே இருக்கிற அத்தனை விஷயங்களையும் இந்த வயசிலேயே அவங்க மூளையிலே திணிக்கணுமா என்ன.

இந்த பாடப் புத்தக மூட்டைகள் ஒரு பக்கம். இது தவிர ஏதேதோ   செடிகள், டூல் பாக்ஸ் அது இதுன்னு வேற எக்கச் சக்கமா கொண்டு போறாங்க. பிராக்டிகல் கிளாசாம். அதுக்காக கொண்டு போகணுமாம்.

அப்புறம் இந்த எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டி வேற . கராத்தே ,டான்ஸ், தியானம் இப்படி அந்த ஸ்கூல்லே நடத்துறதிலே     ஒண்ணு விடாம சேத்து விடணும், சனி ஞாயிறு வந்தாலும் பள்ளிக்கூட காம்பஸ் புள்ளைங்களை விட மாட்டேங்குது.

இவ்வளவுக்கும் எக்ஸ்ட்ரா பீஸ் டொனேஷன் லொட்டு லொசுக்குன்னு ஏகப்பட்ட செலவை பெற்றோர் தலை மேலே கட்டிடறாங்க. அவங்க பள்ளிக்கூடத்துக்கு   புதுசு புதுசா கட்டிடங்கள் எப்படிக் கட்டுறது. 'போட்டி நிறைந்த   உலகம்' ன்னு சொல்லி சொல்லி பெற்றோர்கள் எல்லாத்துக்கும்   சமாதானம் ஆயிறாங்க. அதுக்காக இப்படியா புள்ளைங்களை வாட்டி வதைக்கிறது.

  
மிருக வதைச் சட்டம் ன்னு ஒண்ணு கொண்டு வந்து  மிருக வதையைத் தடை செஞ்சுட்டாங்க. ஆனா 'குழந்தை வதைச் சட்டம்  ' ன்னு ஒண்ணு கொண்டு வந்து குழந்தைகளை ஓவரா பாடம், ஹாப்பின்னு  படுத்தக் கூடாதுன்னு சொன்னாத் தான் உருப்படும் போலிருக்கு.

குழந்தை பருவம் என்பது விளையாடிக் கழிக்க வேண்டிய பருவம் . படிப்புங்கிறது அதோடு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமா கொடுக்க வேண்டியதுஇப்படியா மூச்சு முட்டப் படிப்பைத் திணிச்சு புள்ளைங்களைப் படுத்துறது . இப்படி உடலாலும் மனதாலும் கஷ்டப் படுற புள்ளைங்க பெருசாகி  யார் யாரை எப்படி கஷ்டப் படுத்தப் போகுதுங்களோ   தெரியலைங்க

-------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

5 கருத்துகள்:

 1. உண்மையான கருத்து நண்பரே இதற்கு பெற்றோர்கள் விரைவில் நல்ல தீர்வு காண வேண்டும் சில குழந்தைகளை பார்க்க பாவமாக இருக்கின்றது

  பதிலளிநீக்கு
 2. பள்ளிக்கு பள்ளி போட்டிபிள்ளைகள் மேல் ஈட்டிபாய்கிறது

  பதிலளிநீக்கு
 3. உங்கள் கருத்தை ஏற்கிறேன். படிப்பு என்கிற பெயரில் குழந்தைகள் வதை செய்யப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகின்றன நம் நாட்டில். இளம் கல்வி கற்பிக்கும் முறை உடனடியாக மாற்றம் காண வேண்டும். குழந்தைகளிடமிருந்து குழந்தைப்பருவத்தை அபகரிக்கும் சித்திரவதைக்காக, பள்ளிகளும் -ஏன், அறிவற்ற பெற்றோரும் கூட தண்டிக்கப்படவேண்டிவரும்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள் இறுதியில் சொன்னது சிறப்பு.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. பாவம்தான் குழந்தைகள். ஆனால் அதே சமயம் தன் குழந்தைகள் என்று வரும்போது நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து பேர் அப்படித்தான் மாறி விடுகிறார்கள்!

  பதிலளிநீக்கு