ஞாயிறு, 10 ஜனவரி, 2016

பரீட்சை தோல்வி

பரீட்சை  தோல்வி
-----------------------------
காலாண்டு , அரையாண்டு, முழு ஆண்டோ , முதல் பருவம், நடுப் பருவம், கடைசிப் பருவமோ என்ன பேர் வச்சாலும் பரீட்சை பரீட்சை தானுங்களே. இந்த பரீட்சை படுத்துற பாடு ரெம்ப மோசங்க.

ஆரம்பத்திலேயே   இருந்து படிச்சா பரீட்சை நேரத்திலே கஷ்டப் பட வேணாம்னு சில பேர் சொல்லுவாங்க. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. இது நடக்கிற காரியமா. பள்ளிக்கூடமோ கல்லூரியோ திறந்த உடனே நமக்கு படிக்கிறது தான் வேலையா. எவ்வளவு வேலை இருக்கு. பசங்களை எல்லாம் எத்தனை நாள் கழிச்சு பாக்கிறோம். அவங்களோட வெளியே சுத்தணும். சினிமா போகணும் . எம்புட்டு வேலை இருக்கு.

இதுக்கு நடுவிலே அட்டெண்டன்சுக்காக பள்ளி , கல்லூரிக்கும்  அப்பப்போ போக வேண்டியதாய் இருக்கு. வாத்தியார் சொல்றது எல்லாம் அப்படியே தாலாட்டாய் மாறி நம்மளை தூங்க வேற வச்சிடுது. இது தவிர காலையிலே இருந்து மாலை வரைக்கும் உட்கார்ந்துக்கிட்டு இருக்கிறது உடம்பே அலுப்பாய் ஆயிடுது. இதுக்கு மேலே வீட்டுக்கு வந்து பாடத்தை படிக்கிறதா. அய்யய்யோ .

இப்படியே நாட்கள் ஓடிடும். ஸ்டடி லீவ் வந்திரும். அப்பத் தானே படிக்கணும். அதுக்குத் தானே அந்தப் பேரு வச்சிருக்காங்க. அப்போ புத்தகங்களைப் பிரிச்சுப் பார்த்தா எல்லாம் புதுசு  புதுசா இருக்கும். நம்ம தான் நடத்துறப்போ   தூங்கிட்டோமே .ஒண்ணும் புரியாது . டியுஷன் போகலாம்னா பீஸ்  ஜாஸ்தி இருக்கும். நாளும் பத்தாது.


சரி குரூப் ஸ்டடி பண்ணலாம்னு பசங்க ஒண்ணு சேர்ந்து யாராவது ஒருத்தன் ரூம்லே டிபன் காபி முடிச்சுட்டு படிக்க ஆரம்பிப்போம். ஒவ்வொரு பாடத்தைப் பத்தியும் ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி புரிஞ்சுக்கிட்டு பேசுவான். வேற வழி இல்லாம   பாடத்தை எல்லாம் புரியாமலே உருப் போட்டு முடிப்போம்.

பரீட்சை நாளும் வந்துடும். உள்ளே போய் உட்காந்து கேள்வித்தாளைப் பிரிச்சுப் பார்த்தா நமக்குச் சம்பந்தமே இல்லாத மாதிரி என்னென்னமோ கேட்டு இருப்பாங்க. உத்து உத்துப் பாத்தாலும் ஒண்ணும் புரியாது . எதோ ஒண்ணு ரெண்டு புரிஞ்ச மாதிரி இருந்ததுக்கு என்னமோ நமக்குத் தெரிஞ்சதை எழுதி முடிச்சுட்டு வருவோம்.

வெளியே வந்தா பசங்க கூட கேள்வி பதில்கள் பத்தி டிஸ்கசன் வேற. அவனவன் ஒரே கேள்விக்கே ஒவ்வொரு விதமா பதில் சொல்வான். இதிலே வேற குழப்பம் ஆயிரும். இது அடுத்த நாள் பரீட்சையைப் பாதிக்கும். இல்லேன்னாலும் என்ன பெரிசா ஆயிடும் ங்கிறீங்களா . அதுவும் சரிதான்.

இப்படியே எல்லாப் பரீட்சையும் முடிஞ்சுடும். லீவு ஆரம்பம். எல்லாத்தையும் மறந்துட்டு ஊரு சுத்திட்டு திரும்பி வந்தா ரிசல்ட் வந்திருக்கும். போய்ப் பாத்தா நம்ம  நம்பர் பாஸ் லிஸ்டிலே இருக்காது. நமக்கு ஒண்ணும் ஆச்சரியம் இல்லை. ஆனா நம்ம பெற்றோர்களுக்கு ரெம்ப ஆச்சரியமா இருக்கும். நம்மளைப் பத்தி நல்லாத் தெரிஞ்ச அவங்களுக்கு ஏன் ஆச்சரியமா இருக்குன்னு நமக்கு ஆச்சரியமா இருக்கும்.

 அப்புறம் இருக்கவே இருக்கு. செப்டம்பர், ஏப்ரல் . இப்படியே ஓடி ஏழெட்டு வருடத்திலே டிக்ரீயை முடிச்சு ஏதோ ஒரு வேலையிலே எப்படியோ சேந்துடுவோம்.   பள்ளி கல்லூரிகள்ளே நமக்கு ஏற்பட்ட தோல்விகள் எல்லாம் வாழ்க்கையிலே நமக்கு ஏற்படுற தோல்விகளுக்கு எல்லாம்  நம்மைப் பக்குவப் படுத்தி விட்டுருக்குன்னு அப்புறம் தான் தெரிய வருது. சரி தானுங்களே.

-----------------------------------------------நாகேந்திர பாரதி

5 கருத்துகள்:

 1. அருமை
  குரூப் ஸ்டடின்னு ஒண்ணு சேர்ந்த அரட்டை அடிக்கத்தானே .அங்க போனாத்தானே தெரியும் அட நாமளே பரவாயில்லன்னு ஒரு குரூப் இருக்கும். அன்றைய பாடத்தை அன்ன அன்னைக்கே படிக்கறதா? ஐன்ஸ்டீன் கூட அப்படி படிச்சி இருக்காமாட்டாரே.

  பதிலளிநீக்கு
 2. சிறிய இடைவெளிக்குப் பிறகு
  தங்களின் பதிவினைக் காண்கிறேன்

  பதிலளிநீக்கு
 3. ஹி... ஹி....் ஹி....

  பழைய நினைவையெல்லாம் கிளறி விடறீங்களே....!

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்

  கடந்த கால நினைவுகள்.... மீள் பார்வை..
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு