சனி, 5 டிசம்பர், 2015

இயற்கையின் கோபம்

இயற்கையின் கோபம்
------------------------------------
உடைப்பெடுத்த ஏரிகள்
ஓட்டையான வீதிகள்

மடை திறந்த வெள்ளத்தில்
மூழ்குகின்ற வீடுகள்

உணவின்றி இடமின்றி
ஓடுகின்ற மனிதர்கள்

ஓடுவதில் தோற்றுப் போய்
மிதக்கின்ற உடல்கள்

இயற்கையின் கோபத்தில்
ஏற்பட்ட    கொடுமை

எல்லாமே அழிந்தாலும்
எழும்புகின்ற  ஒற்றுமை

ஒருவருக்கு  ஒருவர்
உதவுகின்ற  அருமை

சாதி மத பேதங்களைச்
சாகடித்த பெருமை

தண்ணீர் வடிந்தவுடன்
தலை தூக்கும் சிறுமை

அடக்கி  வைப்பது தான்
அறிவுடையோர்    கடமை
-----------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems  

3 கருத்துகள்:

  1. எரியிற் வீட்டில் பிடுங்கினது வரை ஆதாயம் என நினைப்போரும் இருப்பது கொடுமையிலும் கொடுமை !

    பதிலளிநீக்கு
  2. சாதி மத பேதங்களைச்
    சாகடித்தப் பெருமை
    இம் மழையினையேச் சாரும்

    பதிலளிநீக்கு