செவ்வாய், 1 டிசம்பர், 2015

கம்ப்யூடர் உலகம்

கம்ப்யூடர் உலகம்
------------------------------------------------ 

மனுஷங்களுக்கு உடம்பு, மனசு ன்னு இருக்கிற மாதிரி கம்ப்யூட்டருக்கு ஹார்ட்வேர்  சாப்ட்வேர் ன்னு இருக்குங்க.

அந்தக் கால மெயின் பிரேம் கம்ப்யூடரிலே எல்லாம் உருவம் பெருசு. உள்ளம் சிறுசு. வட்டம் வட்டமா பெரிய பெரிய டேப்புகளை பெரிய பெரிய சிஸ்டத்திலே சொருகி கம்ப்யூடர் ப்ரோகிராம் ரன் பண்ணி முடிக்க ஒரு நாள்  ஆகும். அந்த ரிப்போர்ட் எல்லாம் பெரிய பெரிய பிரிண்டெரிலெ பிரிண்ட் பண்ணி முடிக்க ஒரு வாரம் ஆகும்.

பெரிய கம்பனியிலே எல்லாம் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் ஒண்ணு தனியா தீவு மாதிரி இருக்கும். பிசினெஸ் டிபார்ட்மெண்ட் அதை ஒரு வித பொறாமையோடும் எச்சரிக்கையோடும் பாக்கும். என்னதான் பெரிய பெரிய சதுர பிளாப்பியிலே ரிப்போர்ட்டைக் கொடுத்தாலும் அம்பது பக்க பிரிண்ட் அவுட்டையும் கேட்டு வாங்குவாங்க.

ஹார்ட்வேர் விக்கிறவங்க , சாப்ட்வேர் எழுதுறவங்க உலகம் விரிஞ்சுக்கிட்டே போச்சுங்க  .   அதிலும் முக்கியமா தமிழ் நாடு மாதிரி உஷ்ணம் அதிகமான இடங்கள்லே இருக்கிற பசங்க மூளை எல்லாம் வெப்பத்திலே உருகிப் போயி இளகி போயி இருந்ததாலே புரோகிராம் எல்லாம் பட படன்னு எழுதுனாங்க. ஆயிரக்கணக்கா லட்சக்கணக்கா கோடு எழுதி உலகம் முழுக்க சுத்தி வந்தாங்க. அவங்க தாத்தா பாட்டிகளும் நியூ யார்க் , லண்டன் , பாரிஸ் எல்லாம் போயிப் பாத்துட்டு வந்தாங்க.


காலம் ஓட ஓட ஹார்ட்வேர் சுருங்கி சாப்ட்வேர் பெருசாச்சு. ரெண்டும் ஒண்ணாகி 'ஆப் ' ஆச்சு. ஆப்பிள் வந்தாச்சு. எங்கே பாத்தாலும் ஐபோட் , ஐபாட், ஐபோன் உலகம் ஆச்சு. ஆண்டிராய்ட் வந்து அதை அடக்க வேண்டியதா ஆச்சு. போட்டி வந்ததாலே போன்  எல்லாம் குறைச்ச  விலைக்கு கிடைச்சாச்சு.

 சின்னாளப்பட்டி பாட்டி சிக்காக்கோ பேரனோடு தினசரி ஸ்கைப் பிலே    பேச்சு. பாட்டி செத்ததுக்கு வர முடியலேன்னாலும் பேரன் ஸ்கைப்பிலேயே ஈமச்   சடங்கெல்லாம் பண்ணி முடிச்சான்

மனுஷங்களுக்கு உடம்பும் உள்ளமும் ஆத்மாவுக்குள்ளே அடக்கம் தானுங்களே. அது மாதிரி ஹார்ட்வேரும் சாப்ட்வேரும் 'ஆப்' புக்குள்ளே அடக்கம் ஆயிடுச்சுங்கோ.     இந்த வைரசுன்னு ஒண்ணுதான் படாத பாடு படுத்துது.

மனுசங்களுக்கு கோபம் பொறாமை மாதிரி, கம்ப்யூட்டருக்கு ட்ரோஜான் , ஒர்ம் ன்னு என்னன்னமோ புதுசு புதுசா வரது.   அதை எல்லாம் ஒழுங்கு பண்ணினாதான்  கம்ப்யூட்டர் உலகமும் ஒழுங்கா இருக்கும். மனுஷங்க உலகமும் ஒழுங்கா இருக்குமுங்க  .
--------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


2 கருத்துகள்: