வெள்ளி, 9 அக்டோபர், 2015

இலையுதிர் கோலம்

இலையுதிர் கோலம்
-------------------------------
அத்தனை இலைகளும்
அவிழ்ந்து விழுந்ததால்

வேதனையில் ஆடும்
வெற்றுக் கிளைகள்

பூத்துக் குலுங்கிய
கோலம் போனதால்

புன்னகை மறந்து
நிற்கும் மரங்கள்

போனது திரும்பும்
காலப் போக்கில்
-----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems
  

4 கருத்துகள்:

 1. அருமை நண்பரே மிகவும் ரசனைக்குறிய கவிதை வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்

  வரிகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. போனது திரும்பும்
  காலப் போக்கில்...மனிதர்களைத் தவிர....

  பதிலளிநீக்கு