வெள்ளி, 30 அக்டோபர், 2015

புரொகிராமர் படும் பாடு - நகைச்சுவைக் கட்டுரை

புரொகிராமர் படும் பாடு  - நகைச்சுவைக்  கட்டுரை 
-----------------------------------------------------------------------------------------------------------------
இந்த மேனேஜர் என்கிற ஜீவராசிங்க எங்களை, புரோகிராமரைப் படுத்திற பாடு இருக்கே , அப்பப்பா .இவங்கதான் ப்ராஜெக்டாம் . நாங்கள்லாம் வெறும் ப்ராசெஸ்ஸாம்  ,  ஏங்கப்ராஜெக்ட் இல்லாம ப்ராசெஸ் இருக்கலாம். ஆனா  ப்ராசெஸ்   இல்லாம ப்ராஜெக்ட் இருக்குமா. சொல்லுங்க. அப்புறம். ப்ராஜெக்ட் டெம்பரரிங்க   . ப்ராசெஸ் பெர்மனண்டுங்க. அப்ப நாங்கதானே மெயின். பி எம் பி படிச்சுருக்கிறதா பெருசா சொல்லிக்கிறாங்க . இது கூடத் தெரியலீங்க.

கோடு எழுதுறதெல்லாம் நாங்க. அதை டெலிவரி பண்றவங்கதான் இவங்க. நாங்க தான் குக் . இவங்க வெறும் சர்வர் தாங்க. அதுக்காக நாங்க கோடு  எல்லாம் குக் பண்ணி எழுதுறதா நினைச்சுடாதீங்க. ஏதோ அந்தக் காலத்திலே கம்பனியிலே சேர்ந்த புதுசிலே புரோகிராம் எழுத கத்துக்கிறது பாதி, எழுதுறது பாதின்னு இருந்தோம். ஆனா இப்பல்லாம் சீனியர் ஆயிட்டோம்ல .புரோகிராம் எங்க மூளையிலே ஒரு மூலையிலெ அப்படியே ஓடுதுங்க. என்ன ஒண்ணு. இந்த டொமைன்  லாஜிக்கை புரோக்கிராம் லாங்குவேஜிலே எழுத கொஞ்சம் கஷ்டப்படுவோம். அவ்வளவுதான்.

இவ்வளவு கஷ்டப்பட்டு நாங்க புரோகிராம் எழுதி முடிச்ச உடனே இந்த மேனேஜர்ஸ் , கஸ்டமர் மாத்தச் சொல்றாங்க ன்னு வருவாங்க. கஸ்டமர் கொடுக்கிற அப்ளிகேஷனை எல்லாம் உடனே அக்செப்ட் பண்ணிடுவாங்க. நம்ம கொடுக்கிற லீவ் அப்ளிகேஷனை மட்டும் போஸ்ட்போனோ  ரிஜெக்டோ   பண்ணுவாங்க.     ஏங்க , நமக்கு வர்ற காய்ச்சலைத் தள்ளிப் போடவோ ரிஜெக்ட் பண்ணவோ முடியுமாங்க. ரெம்பப் படுத்துறாங்க.


அப்புறம் இந்த ப்ரோக்ராம் மாத்துறது எல்லாம் உடனே உடனே மாத்தணுமாம் நாளைக்குப் பண்ணி முடிக்க வேண்டியதை நேத்தே பண்ணிட்டியான்னு கேக்கிறாங்க. டிசைன் , டெவலப்மெண்ட் , டெஸ்டு, லொட்டு, லொசுக்குன்னு எவ்வளவு பிராசஸ் இருக்கு. அது தவிர இவங்க சி எம் எம் , சிக்ஸ் ஸிக்மா அப்படின்னு கஸ்டமருக்கு காமிக்கற ப்ரெசெண்டெஷன் லே பெருசா பெருமை வேறு அடிச்சுருக்காங்க    .  எல்லாம் கம்ப்ளை பண்ண வேணாமா. அஜைல் அஜைல் ன்னு வேற சொல்லிக்கிறாங்களே தவிர ஆயிரத்தெட்டு டாக்குமெண்ட் பண்ணணும் கிறாங்க  .   எப்படிங்க அவ்வளவு சீக்கிரம் முடிக்கிறது.    

கம்ப்யுட்டர் மெஷின்லே வேலை செய்றோம் சரி, அதுக்காக நாங்களே மெஷின்னா எப்புடி . அப்புறம் நாங்க கம்ப்யுடெரிலெ வொர்க் பண்ணுறப்போ பின்னாலேயே வந்து நிக்கிறது. நாங்க பேஸ் புக், டுவிட்டர் போறமான்னு பாக்கிறதுக்கு . எங்களுக்கு மல்டிபிள் விண்டோஸ் ஓபன் பண்ணி மறைக்கத் தெரியாதா. நாங்கள்லாம் பேஸ் புக் ஸ்டேட்டஸ் விண்டோவையே பெருசு பண்ணி கோடு அடிக்கிறவங்க. எங்க கிட்டேயேவா.     .அப்புறம் இவங்களுக்கு என்ன புரியுதுன்னு பாக்கிறாங்க. இங்கிலீஷ் லாங்குவேஜே புரியறது இல்லை . எங்களோட புரோக்கிராம் லாங்குவேஜா புரியப் போகுது இதுங்களுக்கு .

அப்புறம் இந்த டைம் ஷீட்டுன்னு ஒண்ணு வாரக் கடைசியிலே வருங்க. வெள்ளிக்கிழமை  ராத்திரிக்குள்ளே முடிக்கணும். ஒண்ணா ரெண்டா ஒன்பது சிஸ்டத்திலே ஒன்பது பார்மட்டிலெ பதிவு பண்ணணும். நாங்க செஞ்சது செய்யாதது   எல்லாம்    யோசிச்சு அடிக்க வேண்டாமா. அதுக்கு ஒரு அரை நாளாவது ஆகும்.   அவசரப் படுத்துவாங்க. அது   தவிர அதுக்கு ஆகிற   நேரத்தை  வேலை நேரத்திலே  சேத்துக்கக் கூடாதாம். ரெம்ப மோசங்க.

 எல்லாம் முடிச்சு கோடு எழுதி டெஸ்டு பண்ணி கஸ்டமர் சிஸ்டத்திலே லைவ் பண்ணிருவோம். இந்த மேனேஜருங்க நைசா எல்லாக் கிரெடிட்டையும் இவங்க எடுத்துக்கிட்டு மேனேஜ்மெண்ட்டிலெ    இருபது பெர்செண்ட் இன்க்ரிமெண்ட்  இவங்களுக்கு வாங்கிடுவாங்க. எங்களுக்கு வெறும் அஞ்சு பெர்சென்ட் இன்க்ரிமெண்ட் தான் கிடைக்கும். அப்புறம் ஏன் நாங்க ஒவ்வொரு கம்பெனியா   மாற மாட்டோம்.   அதுக்கு பெருசா கம்ப்ளைன்ட் பண்றது. என்ன செய்யலாம்  .  பேசாம  மேனேஜர் ஆகிட வேண்டியது தான் போலிருக்கு,

-----------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

7 கருத்துகள்:

 1. அதுக்கும் வழியிருக்கோ ? ஆயிட வேண்டியதுதானே - ஆனால் பேசிட்டு மானேஜர் ஆகுங்க; பேசாம மேனேஜர் வேண்டாம் . .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சுப்ரமணியன் சார் . இல்லன்னா வருங்கால புரோக்கிராமர்களை எப்படி சமாளிக்கிறது

   நீக்கு
  2. மேனேஜர்கள் படும் பாடு பற்றிய இந்தக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள் http://www.bharathinagendra.blogspot.in/2015/09/blog-post_8.html

   நீக்கு
 2. நல்ல யோசனை நண்பரே
  மனேஜர் ஆகிவிடுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேனேஜர்கள் படும் பாடு பற்றிய இந்தக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள் http://www.bharathinagendra.blogspot.in/2015/09/blog-post_8.html

   நீக்கு
 3. அருமை .ஐடி பணி பிரச்சனைகளை நகைச்சுவையா சொல்லி இருக்கீங்க . என்றாலும் உண்மைதானே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேனேஜர்கள் படும் பாடு பற்றிய இந்தக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள் http://www.bharathinagendra.blogspot.in/2015/09/blog-post_8.html

   நீக்கு