ஞாயிறு, 25 அக்டோபர், 2015

பட்டணத்துச் சந்தை

பட்டணத்துச் சந்தை
---------------------------------
பட்டிக்காட்டு மலையிருந்து
வெட்டி வந்த பழங்கள்

பட்டணத்துச் சந்தையிலே
விற்பனைக்கு இருக்கும்

வெட்டி வைத்த ருசிக்கான
துண்டுகளோ பறக்கும்

கட்டி வைத்த  விலைக்கான
பழங்களோ கிடக்கும்

சந்தையிலும் காயாத
சம்சாரி வியர்வை
-------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

6 கருத்துகள்:

 1. வணக்கம்
  உண்மைதான் இரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. சம்சாரி வியர்வை காயுமுன் கூலி கிடைப்பது எந்நாளோ ?

  பதிலளிநீக்கு
 3. சந்தையிலும் காயாத
  சம்சாரி வியர்வை... வலி உணர்த்தும் வலிமையான வரிகள் .

  பதிலளிநீக்கு
 4. அட அட அட ... நிதர்சனம் உங்கள் கவிதையில் நிழலாடுகிறது.

  வாழ்த்துக்கள்

  கோ

  பதிலளிநீக்கு