சனி, 24 அக்டோபர், 2015

ரோஜா என்றும் ரோஜாவே - நகைச்சுவைக் கட்டுரை


ரோஜா என்றும் ரோஜாவே - நகைச்சுவைக் கட்டுரை 
------------------------------------------------------------------------------------------------------------------------
ரோஜாவை மல்லிகை என்றோ மலை வாழைப்பழம்   என்றோ சொல்லாதவரை  ரோஜாவை ரோஜா என்று சொல்லுவதில் நமக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. என்ன பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா என்றும் ரோஜாதான் ; அதன் மணம் என்றும் நறுமணம்தான் என்று சொல்ல வருகிறார்கள் என்று புரிகிறது.

ஆனால் இந்தக் காலத்தில் பெயருக்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறதே . 'மேலாளர்' என்பவருக்கு ' மேலாண்மைப் பேராண்மைப் பெரியவர்' என்றால் தான் பிடிக்கிறது  . 'புராகிராமர் ' என்பதை விட 'மென்பொருள் மேதாவி மேதை' என்று அழைக்கப் படவே விரும்புகிறார்கள் . எப்படி அழைத்தாலும் ரோஜா ரோஜா தான். அவர்கள் வேலை அதே வேலைதான்.

மற்றும் வயதாக ஆக  மகன் என்றும் அப்பா என்றும் தாத்தா என்றும் அழைக்கப் பட்டாலும் நமது மனிதப் பிறவியின் அடிப்படைக் குணம் மாறுவது இல்லையேகிளார்கில் இருந்து    மேனேஜர் ஆகி டைரக்டர் ஆனாலும் அம்மாவுக்குப் பிள்ளைதானே . தாத்தாவுக்கு பேரன்தானே . ரோஜா என்றும் ரோஜா தானே.

ஆனால் எவ்வளவோ விஷயங்கள் உலக மயமாக்கலால், பெயரிலும் உருவத்திலும்  மாறி இருப்பதைப் பார்க்கிறோம் .

இட்டிலிபர்கர் ஆகி விட்டது. தோசை , பிஸ்ஸா ஆகிவிட்டது. தண்ணீர் ' தண்ணிஆகிவிட்டது .வயல் வீடு ஆகி விட்டது. மரம், கரி ஆகி விட்டது . மணல், குழி ஆகி விட்டது . கடை ' மால் ' ஆகி விட்டது. கிராமம் நகரம் ஆகி விட்டது. நகரம் ' மெட்ரோ ' ஆகி விட்டது.

கொஞ்ச நாள் போனால் தமிழும் இங்கிலீஷ் ஆகி விடும் போல் இருக்கிறது. அது வரைக்கும் சொல்லிக் கொள்ளலாம் ' ரோஜா என்றும் ரோஜா தான் '
-----------------------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

5 கருத்துகள்:

 1. //கொஞ்ச நாள் போனால் தமிழும் இங்கிலீஷ் ஆகி விடும் போல் இருக்கிறது//இதுவும் கூகூகூகூடிய சீக்ரம் நடக்கும்?!

  பதிலளிநீக்கு
 2. நகைச்சுவையே என்றாலும், கால மாற்றத்தைப் பற்றி நன்றாகவே சொன்னீர்கள். தமிழுக்கு இதுபோன்ற பெயர் நிலைமை வராது என்பதன் அறிகுறிதான், அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் வலைப்பதிவர் சந்திப்பின் செய்தி எனக் கொள்ளலாம். ரோஜாவை எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் ரோஜா ரோஜாதான். ஆனாலும் ரோஜாவை வேறு பெயர் சொல்லி அழைக்க யாரும் விரும்ப மாட்டார்கள். அதேபோல தமிழைத் தமிழ் என்றே அழைப்போம். (இது ஒரு சாதாரண கருத்துரைதான்; சீரியசாக (?) எடுத்துக் கொள்ள வேண்டாம்.)

  பதிலளிநீக்கு
 3. ரோஜா ரோஜாதான் என்னிக்குமே. அதுக்கு இன்னும் ஷார்ட்கட் கண்டுபிடிக்கலையாம் :)

  பதிலளிநீக்கு

 4. உங்கள் நகைச்சுவை கட்டுரையில் பொருட்ச்சுவையும் மிகுந்து காணபடுகிறது.

  பதவிகளின் பெயர்மாற்றம், திருமண சந்தையில் சில்லறையை கூட்ட பயன்படுகிறது.

  வளைகுடா நாட்டில் நண்பர் சொன்னது: பெண் வீட்டாரிடம் மாப்பிள்ளை "அர்பானா" ஆப்பரேட்டர் என சொல்லி திருமணம் நடத்தப்பட்டதாம். திருமணத்திற்கு பிறகு மாப்பிள்ளை வெளி நாடு திரும்பி விட்டார். நாளடைவில் பெண்ணின் உறவினரும் அதே வெளி நாட்டில் வேலை கிடைத்து வந்திருக்கின்றார், அங்கே தான் நம்ம மாப்பிள்ளை, காய் கறி சந்தையில் காய் கறிகளை அடுக்கி கையால் தள்ளும் இரண்டு சக்கர வண்டியை தள்ளிக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டு அந்த வண்டியின் பெயரை பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டதற்கு அதன் பெயர் "அர்பானா" என சொல்லி இருக்கின்றனர்.

  ஊரில் நம்ம அர்பானா ஆப்பரேட்டரின் மனிவியோ நம் வீட்டுக்காரர் ஏதொ, ராக்கெட் அல்லது விமான நிறுவனத்தில் பெரிய சாதனத்தை இயக்கும் வல்லுநர் என நினைத்து காலம் தள்ளிகொண்டிருந்தாளாம்.

  பகிர்விற்கு நன்றி.

  வாழ்த்துக்கள்

  கோ

  பதிலளிநீக்கு