செவ்வாய், 20 அக்டோபர், 2015

காட்டுக்குள்ளே திருவிழா

காட்டுக்குள்ளே திருவிழா
------------------------------------------
நிலவின் குளுமை
ஒளியினை விரட்டி

நியான் விளக்குகளின்
நெருப்பு வெளிச்சம்

குருவிகள் கீச்சுக்
குரலினை விரட்டி

வாத்தியக் கருவிகள்
வறட்டுக் கூச்சல்

நாட்டு மனிதர்கள்
காட்டுக்குள் வந்ததால்

காட்டு விலங்குகள்
நாட்டுக்குள் நகரும்
--------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

7 கருத்துகள்:

 1. வணக்கம்

  இரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. மிக மிக ஆழமாகச் சிந்தித்து
  எளிமையாக எழுதப்பட்ட
  அற்புதமான கவிதை

  நிறையத் தீயவைகள் உள் நுழைதலையும்
  அதன் காரணமாய் வெளியேறும்
  பல நல்லவைகளையும் ஒருமுறை
  நினைக்க வைத்துப் போகும் கவிதை
  அருமையிலும் அருமை

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. உண்மையை உரைக்கச்சொல்லும் அருமையான கவிதை! நன்றி

  பதிலளிநீக்கு
 4. எல்லா விலங்குகளும் நாட்டுக்குள்தான் அய்ய ா உலாவுகின்றன....

  பதிலளிநீக்கு
 5. //காட்டு விலங்குகள்
  நாட்டுக்குள் நகரும்//
  அதுதானே நடக்குது!

  பதிலளிநீக்கு
 6. அருமையான சிந்தனை.

  இது சம்பந்தமாக எமது, "கருடா சௌக்கியமா" பதிவில் சொல்லி இருக்கிறேன்.

  படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

  நன்றி

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே. வால்பாறை சொல்கிறது . .உண்மை ஐயா

   நீக்கு