ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தாத்தா பாட்டி

தாத்தா பாட்டி
-----------------------
கோமாவில் கிடக்கின்ற
கொண்டவளைப் பார்க்கின்றார்

கண்டதும் களித்ததும்
உண்டதும் உணர்ந்ததும்

சேர்ந்து நடத்திய
சிறப்புக்கள் அனைத்துமே

கண்களில் உருண்டு
கண்ணீராய்த் திரண்டு வர

அவ்வுலகில் வரவேற்க
அவளுக்கு முன் செல்கின்றார்
----------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems
   

9 கருத்துகள்:

 1. தாத்தா, பாட்டியைச் சரியாக அவதானித்திருக்கிறீர்கள்..

  பதிலளிநீக்கு
 2. தாத்தா பாட்டியை நன்றாக அவதானித்திருக்கிறீர்கள்..

  பதிலளிநீக்கு
 3. தாத்தா பாட்டியை நன்கு கவனித்திருக்கிறீர்கள்..

  பதிலளிநீக்கு
 4. இதுதான் காதல்!கவிதையாகக் கான்கையில்,தாக்கம் அதிகம்!

  பதிலளிநீக்கு
 5. கண்ணீர் துளிர்க்க செய்தது உங்கள் தாத்தா பாட்டி கவிதை.

  வாழ்த்துக்கள்

  நன்றி

  கோ

  பதிலளிநீக்கு