புதன், 9 செப்டம்பர், 2015

வங்கியில் எத்தனை வகை -நகைச்சுவை கட்டுரை

வங்கியில் எத்தனை வகை  - நகைச்சுவை கட்டுரை 
------------------------------------------------------------------------------------------------------------------------
அது என்னமோ தெரியலீங்க. பிரைவேட் பேங்கெல்லாம்     பணக்காரங்களுக்கும் கவர்ன்மெண்ட் பேங்கெல்லாம் ஏழைகளுக்குன்னு எழுதி வச்சிருப்பாங்க போலிருக்கு. நம்மளை மாதிரி விவசாயிகள் , அன்றாடம் காய்ச்சிகள் எல்லாம்  பிரைவேட் பேங்குக்குள்ளே நுழையவே முடியிறது இல்லைங்க .ஏதோ சேலரி ஸ்லிப்பாமே, அதைக் காமிச்சாதான் செக்யுரிட்டி உள்ளேயே விடுறான்.

கவெர்ன்மெண்ட் பேங்கு நம்ம சொந்த வீடு மாதிரிங்க. நம்ம பாட்டுக்கு ஜாலியா போகலாம். வரலாம். க்யூவிலே நின்னு      சண்டையெல்லாம் போடலாம். கண்டுக்கவே மாட்டாங்க.   நம்ம மாசா மாசம் போடுற நூறு ரூபாய்க்கு நல்ல மரியாதி கொடுக்கிறாங்க. கமிஷன் எல்லாம் கொஞ்சமாதான் பிடிக்கிறாங்கஆனா என்ன  ஏதாவது வேலைன்னு போனா முழுசா அரை நாள் ஆக்கிப்புடுறாங்க  .பெரும்பாலும் வயசானவங்களா இருக்கிறாங்களா. கம்ப்யுட்டர் எல்லாம் மெதுவா பாத்து பாத்து தானே வேலை செய்யணும் . அதான் கொஞ்சம் லேட் ஆயிடுது.

இந்த பிரைவேட் பாங்கிலே எல்லாம் இளந்தாரிகளா  இருக்காங்களா பட படன்னு வேலையை முடிக்கிறாங்களாம்  .ஆனா ஆயிரம் ரூபாய்க்கு நூறு ரூபாய் கமிஷன் புடிச்சிராங்கலாம்தஸ்ஸு புஸ்ஸுன்னு  .ஏதோ இங்க்லிஷிலே பேசுறாங்களாம். சொன்னாங்க.

அப்புறம் அந்த பிரைவேட் பாங்கு ஏடி எம் லே  எல்லாம் எப்பவுமே சி நல்லா இருக்குமாம். . நம்ம கவெர்ன்மெண்ட் பாங்கிலே ஏடி எம் பெரும்பாலும் திறந்தே கிடக்கு. ஏசி ரிப்பேராம். என்ன. நம்ம எடுக்கப் போற நூறு ரூபாய்க்கு இதே போதுங்கிறீங்களா . அதுவும் சரிதான்.

அப்புறம் இந்த லோனு. கவெர்ன்மெண்ட் பேங்கிலே நம்மளை மாதிரி ஆளுங்களுக்கு உடனே லோன் கிடச்சிருதுங்க. என்ன, ஒரு அஞ்சாறு மாதம் ஆகி நம்ம விவசாய வேலை எல்லாம் முடிஞ்ச பின்னாடிதான் கிடைக்குது. அவ்வளவுதான் . பிரைவேட் பேங்கிலே வேக வேகமாக் கொடுக்கிறாங்களாம். அதுவும் வேக வேகமாக இந்த வாராக் கடனா மாறிடுதாம்ஆனா   அந்த லோனை எல்லாம் தள்ளுபடி பண்ணிடுவாங்களாம். நம்ம லோனுக்கு மட்டும் நோட்டிஸ் அனுப்புவாங்களாம்.

என்னமோ போங்க, நம்ம நாடு ஒரு பக்கம் அமெரிக்கா மாதிரி இருக்காம். இன்னொரு பக்கம், இந்த கிரீஸ் ஸுன்னு சொல்லுறாங்களே அந்த நாடு மாதிரியும் இருக்காம்  .  நமக்கு என்னமோ மானம் பாத்த பொழப்பு தானுங்கோ
------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

      

3 கருத்துகள்:

  1. திருடர்கள் இல்லாமல் இருந்தால் சரி தான்...!

    பதிலளிநீக்கு
  2. அரசு வங்கிகளை இழுத்து மூட அரசாங்கம் எல்லா வேலைகளையும் செய்துக் கொண்டிருக்கிறது ,எதிர்காலத்தில் ஏழைக்களுக்கு இல்லை வங்கி !

    பதிலளிநீக்கு