செவ்வாய், 8 செப்டம்பர், 2015

பாவம் மேனேஜர் - நகைச்சுவைக் கட்டுரை

பாவம் மேனேஜர் - நகைச்சுவைக் கட்டுரை 
--------------------------------------------------------------------------------------------------------
நாங்க மேனேஜர் எல்லாம் ஏதோ எக்ஸ்செல் சீட்டிலே காப்பி   பேஸ்ட்  பண்ணிக்கிட்டு கான்பரன்ஸ் கால் அட்டெண்ட் பண்ணிக்கிட்டு ஜாலியா இருக்கிறதா ரெம்ப பேர் நினைச்சிக்கிட்டு இருக்காங்க. உண்மையான நிலவரம் ரெம்ப கலவரங்க .சொல்றேன் கேளுங்க.

எங்க பாஸ் ஒரு பெரியவர் அப்பப்போ வந்து எங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு ப்ராஜெக்டைப் பத்தி எங்களை மிரட்டிட்டுப் போவாரு. பாவம். அவருக்கிட்டே ஏகப்பட்ட ப்ராஜெக்ட். ஏகப்பட்ட எக்செல் சீட். என்ன பண்ணுவார். ஒரே குழப்பத்திலே இருப்பாரு. நாங்க கேட்டுக்கிட வேண்டியதுதான்.

எங்க டீம் இருக்கே. அதை மேய்க்கிறது  பெரும் பாடு. நாங்க ப்ராஜெக்டிலே சேர்றதுக்கு முன்னாடியே ரெண்டு மூணு பெருசுகளை ஹெச் ஆர் சேத்து விட்டுருப்பாங்க. அது ஏன்னு அவங்களுக்குதான்   வெளிச்சம்அதுக கிட்ட நாம ஜாவா ப்ராஜெக்ட் மொழியிலே கேள்வி கேட்டா அவங்க அவங்களுக்குத் தெரிஞ்ச கோபால் மொழியிலே பதில் சொல்லுவாங்க.

ஜூனியர்கள் அதை விட மோசம். பாதி வேலை பாதி அரட்டை அடிச்சுட்டு, அப்பிரைசல் நேரத்திலே மட்டும் வேற ஒரு கம்பனியோட ஆபர் லெட்டரைக் காமிச்சு இன்க்ரிமெண்ட் வாங்கிடுவாங்க.

ஏதாவது வெளிநாட்டு  வாய்ப்பு வந்தாப் போச்சு. இப்படிதாங்க, பாரிஸ்லே ஒரு வேலை. நம்ம மெட்ராஸ் பாரிஸ் இல்லே. பிரான்ஸ் பாரிஸ்.    பெருசு சிறுசு  ங்கிற  விவஸ்தையே கிடையாது. கோபால் பெரிசு ஜாவா படிக்க ஆரம்பிச்சுடும். சிறுசுகள் எல்லாம் பிரெஞ்சு படிக்க ஆரம்பிச்சுட்டாங்க   . கடைசியிலே கஸ்டமர் செலவைக் குறைக்கிறதுக்காக வேலையை இங்கேயே செய்யச் சொல்லிட்டாங்க. எல்லாரோட ஈபில் கோபுர ஆசையும் பைசா கோபுரமா சாஞ்சிடுச்சு. அவங்களை சமாதானப் படுத்தி கம்பனியிலே இருக்க வைக்கிறது பெரும் பாடு ஆயிடுச்சு.

அப்புறம் இந்த கான்பரன்ஸ் கால் இருக்கே. அது பெரிய கூத்து. அமெரிக்க கஸ்டமர்  என்ன பேசுறான்னே புரியாம நம்ம டீம் ஆளுங்க 'எஸ் சார் , ஓக்கே சார்' ன்னுட்டு வந்துருவாங்க. மினிட்ஸ் பாத்தா ஒரு மாசத்திலே முடிக்கிற வேலையை பத்து நாள்லே முடிக்க ஒத்துக்கிட்டு வந்திருப்பானுங்க. நம்ம அதை சரி பண்ணி, ஆளுங்களைச் சேர்த்து, எக்ஸ்செல்லை மாத்தி வேலையை   முடிக்கிறதுக்குளே பெரும் பாடு ஆயிடும்.

இப்படியே கொஞ்ச காலம் ஓடிடும். திடீர்னு நம்ம கம்பெனியை   வேற ஒரு கம்பெனி வாங்கிடும்.   நம்ம போன ப்ரொஜெக்டில் துரத்தி விட்ட ஒரு பையன் நமக்கே பாஸ் ஆக வந்திடுவான். அவன் நமக்கு சீட்டைக் கிழிச்சுடுவான்  .   

வீட்டிலே பசங்க எல்லாம் கல்யாண வயசிலே நிப்பாங்க. நம்ம கிராஜுட்டி பி எப் எல்லாம் வச்சு கல்யாண ஏற்பாடு பண்ணிட்டு பத்திரிகை கொடுக்கப் போனா, நம்ம சொந்தக்காரங்களுக்கு நம்மை அடையாளம் தெரிய கொஞ்ச நேரம் பிடிக்கும். அவங்க வீட்டுக் கல்யாணத்திற்கு நம்ம எங்கே போனோம். நம்ம தான் வேலை வேலை ன்னு மேனேஜர் வேலையிலே மூழ்கி கிடந்தோமே. இப்பச் சொல்லுங்க. மேனேஜர்கள் எல்லாம் பாவமா இல்லையா .
------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

   

8 கருத்துகள்:

 1. மேனேஜர்கள் எல்லாம் பாவமா இல்லையா ...நீங்கள் சொல்வதைப்பார்த்தால்.......அப்படித்தான் தோன்றுகிறது..

  பதிலளிநீக்கு
 2. தாங்கள் சொல்வதைப் பாரத்தால் அப்படித்தான் தோன்றுகிறது....

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. and ithu nagaichuvai katturai illa. mokka ... sathiyama siripe varala ...

   நீக்கு
  2. அப்படியும் சில மேனேஜர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் பெயரில்லா நண்பரே. அவர்களைப் பற்றியும் எழுதுகிறேன். நகைச்சுவை இல்லா இன்னொரு மொக்கை கட்டுரை . நன்றி

   நீக்கு
 4. apdiya ? but sila manager onnume theriyama, vanthu ukkanthuttu juniors ah savadikurangale athuku yenna solringa ? yenaku therinja oru manager saraku vangi kudtha rating poduvaru. innum oruthar irukaru naan checkin panra code yellam yeduthu than adicha maduri client ta scene poduraru. intha eena polaipu polaikura managers irukanga.

  பதிலளிநீக்கு
 5. Apram onsite, yenga onsite manager yenna onsite vara sonna intha manager naan poranu poitaru . onsite manager, off shore manager ku call panni , ivana yethuku anupuniga naan antha paiyana thana koptanu appatama solraru ... Neengalam pesa arugathaiye kedaiyathu . so manager pavam illa... avangalam oru parasite maduri suyama vazha mudiyathu ... yevanayavathu depend panni than irukanum ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரொகிராமர் படும் பாடு - நகைச்சுவைக் கட்டுரை படிக்கவும் http://www.bharathinagendra.blogspot.in/2015/10/blog-post_59.html

   நீக்கு