ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

வட்டியைப் பற்றி வெட்டிப் பேச்சு - நகைச்சுவைக் கட்டுரை

வட்டியைப் பற்றி வெட்டிப் பேச்சு  - நகைச்சுவைக் கட்டுரை
----------------------------------------------------------------------------------------------------------------

நம்ம எப்படா வெங்காய விலை குறையும்னு காத்துக் கிடந்தா, அமெரிக்காவிலே , ஏதோ வட்டி ரேட்டைக் கூட்டலேன்னு    ஒரே ஆர்ப்பாட்டம்.

இந்த அமெரிக்காவிலே ஜேனட் ஆலென்னு ஒரு அம்மா , அங்கே இருக்கிற    மைய வங்கிக்கு கவர்னர் ஆக இருக்காங்க. அவங்க ஏதோ வட்டி ரேட்டை கூட்டாம விட்டுட்டாங்களாம் . இதைப் போட்டு நம்ம டிவியிலே அலசு அலசுன்னு அலசுறாங்க .

அங்கே வேலையில்லாதவங்க ரேட்டு கண்ட்ரோல்லா அஞ்சு பெர்சென்ட்டிலேயே இருக்கிறப்போ ஏன் கூட்டக் கூடாதுன்னு சில பேரு. இந்த இன்ப்லேஷன் ரேட்டு அதாங்க பண வீக்கம் மூணு வருஷத்துக்கு மேலே ரெண்டு பெர்செண்டிலேயே இருக்கிறதனாலே கூட்ட வேண்டிய அவசியம் இல்லேன்னு சில பேருஒண்ணும் புரியலேங்க.         

அந்த கவர்னர் அம்மா கூட்டாததுக்கு - வட்டியைத் தாங்க, வேறென்ன வீட்டையாமூணு காரணம் சொல்லிருக்காங்க.

முதலாவது - இந்த டாலர் விலையெல்லாம் கூடிக்கிட்டு இருக்காம். இது அமெரிக்காவுக்கு நல்லதுதானேன்னா   , கிடையாதாம். அங்கே இருக்கிற ஏற்றுமதி செய்யிறவங்களுக்கு வர்ற பணம் குறைஞ்சு போயிருமாம். நல்லாவே யோசிக்கிறாங்க  .

 ரெண்டாவது - சீனாவிலே வளர்ச்சி குறைஞ்சிருக்காம். அதுவும் அமெரிக்காவுக்கு நல்லதுதானே. இல்லையாம். ரெண்டு நாடும் பொருளாதாரத்திலே பின்னிக் கிடக்காம்  . அங்கே இடி இடிச்சா இங்கே மழை பெய்யுமாம்.    சீனா கிட்டே ரெம்ப கடன் வாங்கி இருக்காங்களாம்.  அது சரி, நமக்கு கடன் கொடுத்தவனுக்கு பிரச்சினை வந்தா நமக்கும் தானே பிரச்சினை.

மூணாவது - ஸ்டாக் மார்கெட்டு தாறு மாறா ஏறி இறங்குதாம். நல்லதுதானே. வாங்கி வித்து லாபம் பாக்கலாமேன்னா   அப்படி இல்லையாம். அது அடிப்படைப் பொருளாதாரத்தையும் பாதிக்குமாம். அதனாலே வட்டியைக் கூட்டலையாம்.

என்னமோ போங்க. நமக்கு   பணத்தோட விலையை விட பச்சரிசி விலை முக்கியம். அவங்களுக்கு பணத்தோட , டாலரோட விலையும் கண்ட்ரோல் பண்ணணும். தானிய விலையும் கண்ட்ரோல் பண்ணணும்

இங்கே வட்டீங்கிறது வங்கி களுக்குள்ளே நடக்கிற பணப் பரிமாற்றத்துக்குரிய   வட்டி  . அதுதானே நம்ம வாங்கிற கடனுக்கு , போடுற டிபாசிட்டுக் கெல்லாம்     அடிப்படை வட்டி.   அதனாலே தான் பிரச்சினை

இப்படி என்னென்னமோ சொல்றாங்க. இதுக்கு நம்ம ரகுராம் ராஜன், ரிசெர்வ் பாங்கு கவர்னர் தேவலைங்க பண வீக்கம்  கூடிடும்னு வட்டியைக் குறைக்க மாட்டேங்கிறாரு. அங்கே என்னடான்னா வளர்ச்சியைப் பாதித்துடும்னு வட்டியைக் கூட்ட மாட்டேங்கிறாங்க.  

ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் கவர்னருக்குள்ளே ஒற்றுமை இல்லேங்க. கேட்டா ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாதிரியாம். என்னமோ போங்க. ஒண்ணும் புரியலைங்க.

இந்தப் பணத்தோட விலையை பத்தி - அது தானேங்க வட்டி - ரெம்ப பேசிட்டோம். அதை விடுங்க. நம்ம வீட்டிலே நம்ம பேண்டு சட்டை விலையையே , வீட்டு பொருளாதாரத்தையே மனைவி தான் முடிவு செய்யுறாங்க. இதிலே நமக்கு என்ன நாட்டு பொருளாதாரம் வேண்டி கிடக்கு. விட்டுத் தள்ளுங்க.  

---------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


6 கருத்துகள்:

 1. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
  http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

  பதிலளிநீக்கு
 2. எதார்த்த தகவல்களின் நகைச்சுவை அருமை!!

  பதிலளிநீக்கு
 3. நல்லதொரு அலசல் நண்பரே உலகின் போக்கு புரியவில்லைதான்.
  தங்களின் தளத்தில் இணைந்து கொண்டேன் நண்பரே... தொடர்வேன்...

  பதிலளிநீக்கு
 4. என்னது விலை வாசி கூடிடும்னு வட்டிய குறைக்க மாட்டேங்கறாரா நம்ம ரிசர்வ் பேன் கவர்னர்....அப்ப இப்ப என்ன கூடிருக்காம்...துவரம் பருப்பு விலை "பருப்பு" அப்படினு சொல்ல வைக்கது..விலை வாசி கன்னா பினனனு ஏறியிருக்குது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே. பண வீக்கம் என்பதை விலை வாசி என்று அடித்து விட்டேன். மாற்றி விட்டேன். கரெக்டா புடிச்சீங்க. நன்றி . பண வீக்கம் கூடி அப்புறம் விலை வாசி கூடும்னு ஏதாவது விளக்கம் சொல்வாரு. விட்டுடுவோம்.

   நீக்கு