வியாழன், 10 செப்டம்பர், 2015

பொருளாதார வீழ்ச்சி - நகைச்சுவைக் கட்டுரை

பொருளாதார வீழ்ச்சி - நகைச்சுவைக் கட்டுரை
------------------------------------------------------------------------
நான் நெனச்சே பாக்கலீங்க. நான் பேங்கிலே போட்டிருந்த ஒரு லட்ச ருபாயாலே இந்த அளவு உலக பொருளாதாரம் சரிஞ்சு போகும்னுஎனக்கு இந்த ரீடைல் பேங்கு, இன்வெஸ்ட்மென்ட் பேங்குக் கெல்லாம்   வித்தியாசம் தெரியாதுங்கஎனக்கும் தெரிஞ்சதெல்லாம் காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்கெட்டும் தாங்க.

காய்கறிகளை , நலமா இருக்கவும் ஷேர்களை, வளமா இருக்கவும் வாங்கறது வழக்கம். இப்ப பாருங்க. காய்கறி விலை கூடிப் போச்சு. ஷேர் விலை இறங்கிப் போச்சு. நலமும் போச்சு . வளமும் போச்சு.ரெண்டு பக்கமும் இடி எனக்கு.

யோசிச்சுப் பாத்தா நான் பேங்கிலே போட்ட ஒரு லட்சம் ரூபாய் தான் எல்லாத்துக்கும் காரணம்னு தெரியுது. நான் போட்ட பணத்தை வச்சு இந்த ரீடைல் பேங்கு லோன் குடுத்திருக்கு.

அந்த லோன் கொடுத்த பேப்பரை வச்சு, இந்த இன்வெஸ்ட்மென்ட் பேங்கு , ஏதோ செக்யூரிட்டி பேப்பர் னு சொல்றாங்களே , அதைக் கொடுத்து அந்த லோனை வாங்கி உலக மார்கெட்டிலே   வித்துருக்கு.

   இங்கே இந்த லோன் எல்லாம் வாராக் கடனா ஆனதும். அந்த செக்யூரிட்டி பேப்பர் விலை எல்லாம் சரிஞ்சு போயி  சில இன்வெஸ்ட்மென்ட் பேங்க் எல்லாம் திவாலா ஆயிருச்சாம். ஏதோ லீமன் பிரதர்ஸ் , சிஸ்டேர்ஸ் ஸுன்னு சொல்றாங்களே   . அது நடந்து நாளாச்சு. இருந்தாலும் இன்னமும் உலகப் பொருளாதாரத்தை உசத்த முடியலை

 அதை விடுங்க நம்ம   பிரதர்ஸ் , சிஸ்டேர்ஸ் சில பேருக்கு வேலை போச்சுஎனக்கும் வேலை போச்சு . இப்ப பாருங்க. வெளி நாட்டு மார்க்கெட்டு சரிஞ்சது வெங்காய மார்க்கெட்டு வரை வந்தாச்சு. எல்லாம் எதனாலே. நான் போட்ட ஒரு லட்ச ரூபாயை வச்சுதானே எல்லாம் நடந்திருக்கு. பேசாமா அதை  நான் வீட்டிலேயே வச்சிருக்கலாம். இல்லே உங்க கிட்டேயாவது கொடுத்து வச்சிருக்கலாம். . 

இப்ப அதை விடுங்க. இந்த சீன பொருளாதாரம் நல்லா வந்தாத் தான் உலகப் பொருளாதாரம் உருப்படுமாம். அங்கெ சளி புடிச்சா நமக்கு தும்மல் வருது. என்ன பண்றது.   சாமியைக் கும்புட வேண்டியதுதான்.


------------------------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து: