வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

சின்னத்தாயி திண்ணை

சின்னத்தாயி திண்ணை
----------------------------------------
வாரம் ரெண்டு முறை
சாணியால் மெழுகி விட்டு

தினசரி  ரெண்டு முறை
வெளக்குமாத்தால் பெருக்கி விட்டு

திண்ணையில் படுத்திருந்த
சின்னத்தாயி போயாச்சி

திண்ணை இருக்கிறது
மேடு பள்ளமாக

சின்னத்தாயி நினைவுச்
சின்னமாக  மாறி
------------------------------நாகேந்திர  பாரதி
Nagendra Bharathi's poems

3 கருத்துகள்:

  1. அது அந்தக் காலம்
    இப்பொழுது எல்லாம் சாணியால்
    யார் மெழுகுகிறார்கள்
    திண்ணை என்பதேஇப்பொழுது காணாமல் போய்விட்டதே

    பதிலளிநீக்கு
  2. இன்று நகர நாகரிக வாழ்வில் திண்ணை எங்கே? சாணமிட்டு மெழுகல் எங்கே?

    சின்னத்தாயி போலவே நினைவில் அதுவும்.

    அருமை.

    தொடருங்கள் ஐயா.

    நன்றி

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்

    நினைவுக் கீற்றை மிக அருமையாக சொல்லியுளீர்கள் வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு