புதன், 5 ஆகஸ்ட், 2015

நிறம் மாறிய நேரம்

நிறம் மாறிய நேரம்
-----------------------------
அரக்குச் சிவப்புக்குப்   பதில்
குங்குமச் சிவப்பில் சேலை எடுத்ததால்
மனைவியிடம் திட்டு

அடர் நீலத்துக்குப் பதில்
இள நீலத்தில் சட்டை எடுத்ததால்
மகனிடம் திட்டு

கிளிப் பச்சைக்குப் பதில்
இலைப் பச்சையில் பாவாடை எடுத்ததால்
மகளிடம் திட்டு

நிற பேதம் தெரியா நமக்கு
கருப்பு வெள்ளைதான் லாயக்கு
-------------------------------------நாகேந்திர பாரதி
நாகேந்திர பாரதியின் கவிதைகள்

2 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா
  உண்மைதான் பகிர்வுக்கு நன்றி.
  நம்ம பக்கம் கவிதை வாருங்கள்

  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தமிழன் முகவரி இழந்தோம்.....:.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லாசனி, ஆகஸ்ட் 08, 2015

  நிற பேதம் தெரியா நமக்கு
  கருப்பு வெள்ளைதான் லாயக்கு//
  என்ன ரெம்ப வயசாச்சோ!!!!!!

  பதிலளிநீக்கு