சனி, 15 ஆகஸ்ட், 2015

பாடச் சுமை - நகைச்சுவைக் கட்டுரை

பாடச் சுமை - நகைச்சுவைக் கட்டுரை 

இந்தப் புள்ளைங்கல்லாம் புத்தகத்தை மூட்டை மூட்டையா தோளிலே சுமந்துக்கிட்டு போறதைப் பாக்கிறப்பெல்லாம் எனக்கு என்னோட பள்ளிக்கூட ஞாபகம்தான் வர்றது.

எத்தனை பாடம், தமிழ்ஆங்கிலம் , ஹிந்தி , கணக்கு, இயற்பியல், வேதியியல் , தாவரயியல் , விலங்கியல் , பூகோளம், சரித்திரம், அப்பப்பா .

தமிழ். தாய் மொழி . எளிதா இருக்கணுமா இல்லையா . திருக்குறள் தவிர மத்த இலக்கியம் எல்லாம் கஷ்டமா இருந்துச்சு . ' தேறா மன்னா செப்புவது உடையேல்'   அந்த மன்னன் எந்த வகுப்பிலே தேறலை. அதுக்காக எதுக்கு செப்பை எல்லாம் உடைக்கணும் . அப்புறம் வாத்தியார் வந்து அந்தக் கால தமிழை இந்தக் காலத் தமிழ்லே மொழி பெயர்த்துச் சொன்னார் .

ஆங்கிலம் - இந்த ப்ரீபொசிஷன் இலக்கணத்திலே இருக்கே. அது புரியவே இல்லை. ஏங்க ப்ரீபொசிஷன் ன்னா என்ன அர்த்தம். முன்னாலே வர்ற துன்னு தானே அர்த்தம். அப்புறம் ஏன் அது நடுவிலே எல்லாம் வந்து தொலையறது .

ஹிந்தி - தமிழ்லே ஒரு '' வை வச்சுக்கிட்டே நாம்  கஷ்டப்படுறோம். அங்கே நாலு '' வாம் . நாலு '' வாம்    . இன்னும் ரெம்ப. சொல்லிச் சொல்லி நம்ம தொண்டை ரணமாய் ஆயிடுத்து .

கணக்கு. இதிலே எனக்கு ஒரு சந்தேகம். வாத்தியாராலே தீக்கவே முடியலை. (a+b)2  = a2 + b2 + 2ab   யாம் .      (a+b)2 ன்னா   a2 + b2    மட்டும்தானே   வரணும் . இந்த   2ab  எதுக்கு பின்னாலே வர்றது. புரியலை .

இந்த வேதியியல்லே   குடுவையை ஆட்டிக்கிட்டே இருக்கணும். லேசான பிங்க் கலர் வந்ததும் நிறுத்தணும்.   நமக்கு எப்பவுமே குப்புன்னு பிங்க் கலர் வந்துரும் . அந்த ஒரு சொட்டிலே நம்ம  லேப் மார்க்கெல்லாம்   போயிடும்.

அப்புறம் இந்த இயற்பியல்லெ தாடி வச்சுக்கிட்டு, சொக்கின கண்ணோட ரெம்ப விஞ்ஞானிகள் பித்தகோரஸ் தியரி , பித்துக்குளி தியரி ன்னு எக்கச்சக்க தியரி எழுதி வச்சிருக்காங்க. எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணணும். கணக்கு பித்தகோரஸ் தியரியை ரெம்ப நாளா இயற்பியல்னு வேற நினைச்சுக்கிட்டு   இருந்தேன் 

தாவரயியல் - ஒரு பூவை வச்சுக்கிட்டு சொல்லிக் கொடுத்தாங்க, நம்ம செம்பருத்திப் பூங்கஆனா அதை ஹைபிஸ்கஸ் ரோஸா சைனன்சிஸ் ன்னு சொல்லணுமாம்.        
  
விலங்கியல் - குப்புன்னு நாத்தம் அடிக்கிற அந்த டிசக் ஷன் பெட்டியை வச்சுக்கிட்டு செத்த தவளையை அறுத்து அதோட மூச்சுக் குழல் பகுதியை பிரிச்சுக் காட்டணும். நம்ம மூச்சுக் குழலே   திணறிப் போயிடும்.   

அதை விடுங்க. இந்த பூகோளம் . ஒரு மேப் பைக் கொடுத்து நதிகளைக் குறிக்கச் சொன்னாங்க. நான் காவிரியை வடக்கேயும் கங்கையை தெக்கேயும் குறிச்சுக் கொடுத்தேன். தப்பாங்க. நதிகளை இணைக்கணும்கிற  நம்ம நல்லெண்ணம் யாருக்கும் புரியலைங்க .

அப்புறம். சரித்திரம். என்னோட நண்பன் ஒருத்தன் சொன்னான். சரித்திரத்திலே எவ்வளவு அதிகமா பக்கங்கள் எழுதுறியோ அவ்வளவு அதிகமா மார்க் கிடைக்கும் னு  சொன்னான். கேள்வி வந்தது . அசோகரின் காலம் ஏன் பொற் காலம் என்று அழைக்கப் படுகிறது. எழுதினேன் பாருங்க. அசோகர் சாலையின் இருபுறமும் மரங்களை நட்டார். வலது புறம் அரச மரங்களை நட்டார். இடது புறம் ஆல மரங்களை நட்டார். வலது புறம் புளிய மரங்களை நட்டார். இடது புறம் வேப்ப   மரங்களை நட்டார். இப்படியே பத்துப் பக்கம் மரங்களை நட்டு முடிச்சுட்டேன். ஆனா மார்க்கு வரலைங்க.

இப்புடிப் படிச்ச நம்மளை    ஒழுங்காப் படிக்க வச்சு பாஸ் பண்ண வைக்கணும்னா அந்த ஆசிரியர்களுக்கு எவ்வளவு   பொறுமை வேணும். செப்டம்பர் 5 ம் தேதி மட்டும்  ஆசிரியர் தினம் இல்லைங்கவருடத்தின் எல்லா நாளுமே நம்ம ஆசிரியர்கள் தினம் தானுங்கோ .
-----------------------------------------------    நாகேந்திர பாரதி


9 கருத்துகள்:

 1. இறுதியில் ஆசிரியருக்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள் அய்யா.. தொடர்க உங்கள் பணி... arumai

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லாசனி, ஆகஸ்ட் 15, 2015

  You have good sense of humour.

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லாசனி, ஆகஸ்ட் 15, 2015

  You have good sense of humour

  பதிலளிநீக்கு
 4. உண்மைதான்
  ஒவ்வொருநாளுமே ஆசிரியர் தினம்தான்

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே!
  மிக மிக அருமை!
  தினம் தினம் ஆசிரியர் தினமே!..

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. டாக்டர் ராதாகிருஷ்ணன் வடிவில் முன்னரே வந்து ஆசிரியர் தினம் செப் 5 என்பதை
  நினனைவு படுத்திய பதிவு!
  பொறுமையின் சிகரத்தை ஆசிரியர் பணியின் சிறப்பை மதிப்பொம்! மாண்புறுவோம்! நன்றி நண்பரே!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 7. நல்ல வேளை நான்..படிக்கும் காலத்தில்... புத்தகத்தை மூட்டை மூட்டையா தோளிலே சுமந்துக்கிட்டு போகவில்லை.... ..

  பதிலளிநீக்கு