ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

ஏமாற்று மழை

ஏமாற்று மழை
--------------------------
வருகிற காலத்தில் 
வராமல் இருந்துவிட்டு 

வராத காலத்தில் 
வருவது போல்  காட்டி 

ஊதல் காற்றைக் 
கொஞ்சம் விசிறி விட்டு

தூறல் துளிகளைக் 
கொஞ்சம் தெளித்து விட்டு 

எங்கேயோ போகும் 
ஏமாற்று மழை 
--------------------------நாகேந்திர பாரதி 

2 கருத்துகள்:

 1. தூறல் துளிகளைக்
  கொஞ்சம் தெளித்து விட்டு
  நீவீர் போட்ட
  கவிதைக் கோலம்
  ஏமாற்ற வில்லை!
  ஏ ஒன் என்கிறதே!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு