செவ்வாய், 10 மார்ச், 2015

வெறுத்துப் போன திருடன்

வெறுத்துப் போன திருடன் 
-----------------------------------------
பூட்டுடைத்த திருடன் 
புரட்டிப் போட்டான் வீட்டை 

லாக்கரில் வெச்சதாலே 
நகையொண்ணும் சிக்கலே 

பேங்கிலே போட்டதாலே 
பணமொண்னும் கிடைக்கலே 

எலெக்ட்ரானிக் பொருளெல்லாம் 
இறுக்கமாய் சுவற்றோடு

துணிமணி எல்லாமே 
அழுக்குக் கூடையிலே 

பாத்திர பண்டமெல்லாம் 
சமையல் பிசுக்கோடு

வெறுந்‌ தண்ணி குடிச்சுட்டு 
வெறுத்துப் போய் திரும்பினான் 
--------------------------------நாகேந்திர பாரதி

3 கருத்துகள்: