புதன், 11 மார்ச், 2015

பெரிய பெரிய ஆசை

பெரிய பெரிய ஆசை 
----------------------------------
கிராமத்துக் கண்மாயில் 
நீச்சலடிக்க ஆசை 

கம்பு சுத்திச் சிலம்பம் 
ஆடிப் பார்க்க ஆசை 

ஒத்தையடிப் பாதையிலே 
ஓடிப் பார்க்க ஆசை 

புளிய மரம் ஏறிப் போயி 
காய் உலுக்க ஆசை 

பெரிய பெரிய ஆசை 
மூச்சு வாங்கும் ஓசை 
---------------------------------நாகேந்திர பாரதி 
 

2 கருத்துகள்: