புதன், 4 மார்ச், 2015

ஆபீஸ் அதிகாரி

ஆபீஸ் அதிகாரி 
-----------------------------
இடித்துப் பிடித்து 
ரயிலில் ஏறி 

எல்லா சீட்டும் 
நிரம்பி இருக்க 

தொங்கிக் கொண்டு 
துவண்டு நிற்பவர் 

எங்கேயோ எப்போதோ 
பார்த்த ஞாபகம் 

ஓய்வு பெற்றுவிட்ட 
ஆபீஸ் அதிகாரியா 
-----------------------------நாகேந்திர பாரதி

2 கருத்துகள்: