சனி, 14 மார்ச், 2015

சைக்கிள் சவாரி

சைக்கிள் சவாரி 
-----------------------------
பழைய சைக்கிள் தான் 
பழகத் தருவாய்ங்க 

பாதி நாள் வாடகை 
பத்தே பைசாதான் 

உட்கார வச்சவனே 
உருட்டிக்கிட்டு வரணும் 

கொஞ்சம் விட்டாலும் 
குடை சாயும் சைக்கிள் 

பிரேக்கு பிடிப்பது 
பெரிய விஷயம் 

கழலும்  செயின் மாட்டி 
கரியாகும் கை விரல்கள் 

பட்ட முட்டியிலே 
படுகின்ற காயங்கள் 

கத்து முடிச்சாச்சு 
கால் மாத்தி ஓட்டியாச்சு 
-------------------------------------நாகேந்திர பாரதி 
 

3 கருத்துகள்:

 1. வணக்கம்
  பழைய மிதி வண்டி என்றால் எப்படியான பிரச்சினை வரும் அருமையாக சொல்லியுள்ளீர்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு