திங்கள், 2 மார்ச், 2015

வேலையுள்ள பட்டதாரி

வேலையுள்ள பட்டதாரி 
--------------------------------------
அந்தக் காலத் தமிழுக்கு 
அகராதி அவசியம் 

ஆங்கிலம் படிப்பதில் 
இலக்கண இடைஞ்சல் 

அறிவியல் உயிரியல் 
சோதனைக் கூடங்கள் 

வரலாறு புவியியல் 
வருடங்களும் காடுகளும்

எல்லாம் படித்து விட்டு 
எழுத்தராய்ப் போய்ச் சேர்ந்தோம் 
----------------------------நாகேந்திர பாரதி 

1 கருத்து: