ஞாயிறு, 14 டிசம்பர், 2014

தமிழ்த் தாத்தா வீடு

தமிழ்த் தாத்தா வீடு 
---------------------------------
ஊர் ஊராய்த் திரிந்து 
வீடு வீடாய்த் தேடி 

எடுத்து வந்த இலக்கியத்தை
இறக்கி வைத்த தாத்தா

தமிழ் படித்த வீடு 
தரை மட்டம் ஆனதைய்யோ 

மண்ணை மட்டுமேனும் 
மாலாக மாற்றிடாமல்

நூலகமாய் ஆக்கி விட்டால் 
நூல்கள் நன்றி சொல்லும் 
-------------------------------------நாகேந்திர பாரதி 

2 கருத்துகள்:

 1. வணக்கம்
  அருமையாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. இடிந்த வீட்டின் சில்லுகளை எங்கள் மனதிலும் தெறிக்கச் செய்துவிட்டது உங்கள் கவிதை!
  அருமை அய்யா!
  நன்றி

  பதிலளிநீக்கு