திங்கள், 25 ஆகஸ்ட், 2014

குளியலறைக் கரப்பான்

குளியலறைக் கரப்பான் 
-----------------------------------
குளியலறைக் கரப்பானுக்கு 
குடும்பப் பற்று அதிகம் 

கூட்டமாகச் சேர்ந்து கொண்டு 
குடித்தனத்தை நடத்தும் 

குளிக்க வரும் போது நம்மைப்  
பறந்து வந்து தாக்கும்

மருந்தடித்துப் பார்த்தாலும்  
மறு பிறவி எடுக்கும்

அருவருப்பில் குளிக்காமல் 
ஐந்து நாட்கள் ஆச்சு 
-------------------------------நாகேந்திர பாரதி 

3 கருத்துகள்:

  1. கரப்பானுக்கு பயந்தா ஐந்து நாளா குளிக்காம இருக்கீங்க ?

    பதிலளிநீக்கு
  2. கரப்பானுக்கு பயந்தா,குளியலுக்கு பயந்தா,குளிக்காமல் இருந்தது/

    பதிலளிநீக்கு
  3. Karappan vazhvado iruttil sakkadai sagathiyil. Pirappal veezhvado veruppil sangada sathirattathil.

    பதிலளிநீக்கு