வெள்ளி, 7 மார்ச், 2014

வேண்டுதல் வேண்டாமை

வேண்டுதல் வேண்டாமை 
-----------------------------------------
மண்ணும் நீரும் தீ 
விண்ணும் காற்றும் சேர்ந்த 

உடம்பு  வளர்வதற்கு  - நல்ல 
உணவு வேண்டும் 

உள்ளம் வளர்வதற்கு  - நல்ல 
உணர்வு வேண்டும் 

இன்னும் வேண்டுமென்று  
எண்ணம் தூண்டி  விட்டால் 

இன்பம் சீண்டாமல்   - துன்ப 
இருட்டு தீண்டிவிடும் 
--------------------------------நாகேந்திர பாரதி 

2 கருத்துகள்:

  1. உண்மையாக முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் !
    இன்று தான் தங்களின் தளத்தினை அறிந்து கொண்டேன் சிறப்பான நற் கருத்து அடங்கிய பகிர்வு .பகிர்வுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என்றும் தமிழோடு இணைந்திருப்போம் .

    பதிலளிநீக்கு