புதன், 26 பிப்ரவரி, 2014

கடற்கரைக் காதலர்கள்

கடற்கரைக் காதலர்கள் 
-------------------------------------------
வீட்டுக்குப் போவதற்கு 
விருப்பம் இல்லாதவர்கள் 

நேரத்தைக் கோபிக்கும் 
நிலைமையில் இருப்பவர்கள் 

பேசுவதே புரியாமல்    
பேசிக் கொண்டிருப்பவர்கள் 

கடலையும் பார்க்‌காமல் 
கடலையும் கொறிக்காமல்

கடலை போட்டுக்கொண்டு 
கடற்கரைக் காதலர்கள் 
----------------------------------------நாகேந்திர பாரதி 

3 கருத்துகள்:

 1. வணக்கம்

  ரசித்தேன்... அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. சுற்றிலும் யாருமே இல்லாதது போன்ற உணர்வு
  அவ்வப்போது அமைதியாக கடலையே பார்த்தபடி சில நிமிடங்கள்
  காற்றில் கரையும் தீண்டல்கள், சீண்டல்கள், சண்டைகள்
  அப்பப்பா..., நான் காதலித்த ஊரில் கடல் இல்லையென்பதன் வெறுமையை இப்போது உணர வைத்து விட்டீர்கள்... இப்பொழுதோ பல காதலர்களும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி ஆளுக்கொரு ஸ்மார்ட் போனை நோண்டிக்கொண்டு இருக்கிறார்கள்..

  பதிலளிநீக்கு