ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

போதும் என்ற முதுமை

போதும் என்ற முதுமை 
------------------------------------
வேட்டியும் துண்டும் 
குடையும் செருப்பும் போதும் 

குளமும் கோயிலும் 
வீடும் திண்ணையும் போதும் 

துகையலும்  தோசையும் 
பழையதும் ஊறுகாயும் போதும் 

சுற்றமும்  நட்பும் 
பக்கமும் மக்களும் போதும் 

இரவும் பகலும் 
இளமையும் முதுமையும் போதும் 
------------------------------------நாகேந்திர பாரதி 
 

3 கருத்துகள்:

 1. மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்

  ரசித்தேன்... வாழ்த்துக்கள்

  எனது பக்கம் கவிதையாக-அம்மாவுக்கு ஒரு விண்ணப்பம் வாருங்கள்... வாருங்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. திருப்தியான வரிகள்...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு