திங்கள், 18 நவம்பர், 2013

நதியின் ஓட்டம்

நதியின் ஓட்டம் 
--------------------------
ஓடுகின்ற நதியாய் 
ஓடுகின்ற காலம் 

சுற்றமும் நட்பும் 
சூழ்ந்த பாதையில் 

வறண்ட கோலமும் 
திரண்ட கோலமுமாய் 

கடக்கும்  ஊர்கள் 
நடக்கும் நாட்கள் 

கடலைச் சேருமுன் 
எத்தனை கற்பனைகள் 
----------------------------நாகேந்திர பாரதி 

2 கருத்துகள்:

  1. ஆழமான சிந்தனையுடன் கூடிய
    அற்புதமான கவிதை எளிமையான வார்த்தைகளில்..
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு