ஞாயிறு, 4 நவம்பர், 2012

விரல் விழா

விரல் விழா


----------------------

பட்டாசுக் கடையைப் பார்க்கும் போது
மருந்தை உருட்டும்
விரல்களின் வேகம்

பட்சணக் கடையைப் பார்க்கும் போது
மாவை உருட்டும்
விரல்களின் வேகம்

ஜவுளிக் கடையைப் பார்க்கும் போது
தறியை உருட்டும்
விரல்களின் வேகம்

விழாக்களின் அழைப்பு
விரல்களின் உழைப்பு

--------------------------------------------------நாகேந்திர பாரதி
2 கருத்துகள்:

  1. எப்படா வந்து போகும் இந்த தீபாவளி என

    விரல்களை உருட்டும் நடுத்தர கும்பதலைவனையும்

    சேர்த்துகொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு