வெள்ளி, 26 அக்டோபர், 2012

கப்பலோட்டிய காலம்

கப்பலோட்டிய காலம்


-----------------------------------------

வாய்க்கால் தண்ணியில்

வரிசையாய்க் கப்பல்கள்

சில மூழ்கிப் போகும்

சில சீறிப் பாயும்

கப்பலோடு சேர்ந்து

வரப்போரம் ஓடி

வழுக்கி விழுந்து

அடிபட்ட காயங்கள்

காகிதக் கப்பலின்

அடையாளச் சின்னங்கள்

-----------------------------------நாகேந்திர பாரதி


2 கருத்துகள்:

  1. நண்பரே பாரதி இதற்கு ஒரு புது கவிதை

    எழுதுங்களேன் என்று சற்று முன்தான் கேட்டேன்

    அதற்குள் போட்டுவிட்டேர்களே நன்றி

    பதிலளிநீக்கு