வியாழன், 30 ஆகஸ்ட், 2012

கலாச்சார மோதல்

கலாச்சார மோதல்


-------------------------------------

மாகாணி வாய்ப்பாடு

சொல்லத் தெரியாது

மண்ணிலே ஆவன்னா

எழுதத் தெரியாது

காலணா அரையணா

பாத்தது கிடையாது

கஞ்சிக்கு கருப்பட்டி

கடிச்சது கிடையாது

காகிதம் மேஞ்சுட்டு

கலாச்சாரம் பேசறான்மெட்ரிக்கு காலத்தில்

மாகாணி தேவையா

ஐபேடு காலத்தில்

மண்ணெல்லாம் எதுக்கையா

அரையணா பார்க்க

பொருட் காட்சி போகலாம்

கருப்பட்டிக் கஞ்சி எல்லாம்

ஹார்லிக்சாய் ஆயாச்சு

பேஸ்புக்கில் போட்டுட்டு

பெருசு புலம்புது

-------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. உண்மை நிலவரத்தை கவிதையாக சொல்லி உள்ளீர்கள்... நன்றி சார்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு