திங்கள், 4 ஜூன், 2012

வெளிப் பூச்சு

வெளிப் பூச்சு


-------------------------

எல்லாக் கருத்துக்களும்

சொல்லப் பட்டவைகள் தான்

எல்லா உணர்ச்சிகளும்

உணரப் பட்டவைகள் தான்

எல்லாச் சண்டைகளும்

போடப் பட்டவைகள் தான்

எல்லாச் சமாதானங்களும்

பேசப் பட்டவைகள் தான்

உள்ளுக்குள் எல்லாமே பழசு தான்

வெளிப் பூச்சு மட்டும் தான் வேறு வேறு

--------------------------------------------------நாகேந்திர பாரதி


1 கருத்து:

  1. எல்லாமே பழசுதான். மிக உண்மை. ஆனாலும் சொல்லும் விதம் புதியது. புதியதாக சொல்வது மதிக்கப்படவேண்டிய ஒன்று.
    umamaheswaran

    பதிலளிநீக்கு