வெள்ளி, 9 செப்டம்பர், 2011

அழகோ அழகு

அழகோ அழகு
---------------------------
கையைக் கையை ஆட்டி
நடப்பது ஒரு அழகு
காலைக் காலைத் தூக்கி
ஓடுவது ஒரு அழகு
தூக்கச் சொல்லிக் கையைத்
தூக்குவது ஒரு அழகு
ஏக்கத் தோடு பார்த்து
எம்புவது ஒரு அழகு
கோபத் தோடு முடியைப்
பிய்ப்பது ஒரு அழகு
பாசத் தோடு முத்தம்
பொழிவது ஒரு அழகு
----------------------------------------நாகேந்திர பாரதி

2 கருத்துகள்:

  1. குழந்தை அழகு...அழகு...
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  2. அருமை அருமை, குழந்தையின் அழகுகளை வர்ணித்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு