சனி, 20 ஆகஸ்ட், 2011

தன்னிலை தெளிவு

தன்னிலை தெளிவு
-------------------------------------
நில்லாத இளமையை
நிலையென்று நினைத்து
வில்லாகி அம்பாகி
விடுபட்டுப் பாய்ந்து
பொல்லாத காதலில்
புதையுண்டு மூழ்கி
சொல்லாலும் செயலாலும்
சுவை கண்டு சோர்ந்து
தள்ளாத வயதினிலே
தன்னிலை தெளியும்
-----------------------------------------நாகேந்திர பாரதி

5 கருத்துகள்:

 1. பெயரில்லாசனி, ஆகஸ்ட் 20, 2011

  ''..தள்ளாத வயதினிலே
  தன்னிலை தெளியும்...''
  இது தான் யதார்த்த வாழ்வு.
  வேதா. இலங்காதிலகம்.
  .

  பதிலளிநீக்கு
 2. பாளையாம் தன்மை செத்தும்
  பாலனாம் தன்மை செத்தும்
  காளையாம் தன்மை செத்தும்
  காமுறும் இளமை செத்தும்
  மீளுமிவ் வியல்பும் இன்னே
  மேல்வரும் மூப்பும் ஆகி
  நாளும்நாள் சாகின் றாமால்
  நமக்குநாம் அழாதது என்னோ

  என்ற குண்டலகேசியின் பாடல் தான் தங்கள் கவிதையைப் படித்தவுடன் நினைவுக்கு வந்தது.
  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு