தண்ணீர் வரிசை
-----------------------------
குற்றாலம் அருவியிலும்
திற்பரப்பு அருவியிலும்
வரிசையில் நின்று
குளித்து வந்தோம்
கொட்டுற தண்ணியில்
ஊருக்கு வந்ததும்
ஆளுக்கொரு குடத்தோடு
வரிசையில் நின்று
பிடித்து வந்தோம்
குழாய்த் தண்ணீரை
--------------------------------------நாகேந்திர பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக